அக்டோபரில் வருகிறது ஹீரோவின் புதிய 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக்!

Written By:

அக்டோபர் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு இறுதியில் இத்தாலியில் நடந்த இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய மோட்டார்சைக்கிள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. இந்த நிலையில், சில காரணங்களால் இந்த பைக்கை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தை ஹீரோ மோட்டோகார்ப் ஒத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக்

ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக்

முழுவதுமாக ஃபேரிங் பேனல்களால் மூடப்பட்ட ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக வருகிறது. எல்இடி ஹெட்லைட், இருக்கைக்கு கீழாக வந்து முடியும் புகைப்போக்கி குழாய் உள்ளிட்ட பல டிசைன் சிறப்பம்சங்களை கொண்டிருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கில் 249சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 31 பிஎச்பி பவரையும், 26 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாக இருக்கும். மேலும், மல்டி சென்சார் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் வருவதால் சிறப்பான எரிபொருள் சிக்கனம் கொண்டதாகவும் இருக்கும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 150கிமீ.,க்கும் அதிகமான வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். முன்புறத்தில் 300மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டு வருகிறது. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்படும்.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.1.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் ஆர்சி200 மற்றும் ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் மாடல்களுக்கு நேரடி போட்டியை தரும்.

 
English summary
Now Hero MotoCorp is expected to offer its quarter-litre HX250R in India by October, 2015. The Indian manufacturer will then launch this motorcycle in international markets where their partner EBR sells motorcycles. International markets may see the fully-faired motorcycle by early 2016 if it encounters any further delay.
Story first published: Friday, February 6, 2015, 17:02 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark