கூடுதல் சிறப்பம்சங்களுடன் 2015 ஹீரோ பேஷன் ப்ரோ அறிமுகம்- முழு விபரம்

Posted By:

கூடுதல் சிறப்பம்சங்களுடன் 2015 மாடலாக ஹீரோ பேஷன் ப்ரோ பைக் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. சந்தை போட்டியை சமாளிக்கும் விதத்தில், அனைத்து பைக்குகளுக்கும் புதுப்பொலிவு கொடுத்து புதிய மாடலாக ஹீரோ களமிறக்கி வருகிறது.

அந்த வகையில், பேஷன் ப்ரோ பைக்கிலும் சிறிய மாறுதல்களை செய்து புதிய மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். புதிய பைக் பற்றிய கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

 மாற்றங்கள்

மாற்றங்கள்

புதிய ஹீரோ பேஷன் ப்ரோ மாடலின் முன்புறத்தில் புதிய மட்கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், 6 ஸ்போக் அலாய் வீல்கள், புதிய டிசைனிலான எல்இடி டெயில்லைட் போன்றவை குறிப்பிடத்தக்க மாற்றங்கள். ஆனால், ஒட்டுமொத்த தோற்றத்தில் அதிக மாறுதல்கள் இல்லை.

எஞ்சின்

எஞ்சின்

புதிய ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கின் எஞ்சினின் அதிகபட்சமான சக்தி வெளிப்படுத்தும் திறன் சிறிது அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் இருக்கும் 97.2சிசி எஞ்சின் 8.24 பிஎச்பி பவரையும், 8.05என்எம் டார்க்கையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முந்தைய மாடலில் இதே எஞ்சின் அதிகபட்சமாக 7.69 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் பெற்றதாக இருந்தது. 4 ஸ்பீடு கான்ஸ்டன்ட் மெஷ் கியர்பாக்ஸ் உள்ளது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும், பின்புறத்தில் 5 விதமாக மாற்றிக்கொள்ளக்கூடிய ஸ்விங் ஆர்ம் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

டிஸ்க் பிரேக் மாடலில் 240மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பொருத்தப்பட்டிருக்கிறது. பின்புறத்தில் டிரம் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதர விபரங்கள்

இதர விபரங்கள்

இந்த பைக் 165மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டது. மேலும், ஒரு லிட்டர் ரிசர்வுடன் கூடிய 12.8 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. கிக் ஸ்டார்ட் மாடல் 116 கிலோ எடையும், செல்ஃப் ஸ்டார்ட் மாடல் 119 கிலோ எடையும் உடையது.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

ஏற்கனவே இருந்த கருப்பு, சிவப்பு, மஞ்சள், சில்வர், நீலம் உள்ளிட்ட வண்ணங்களுடன் தற்போது புதிதாக பழுப்பு வண்ணம் சேர்க்கப்பட்டிருக்கிறது.

 விலை விபரம்

விலை விபரம்

கிக் ஸ்டார்ட் + ஸ்போக் வீல்: ரூ.49,050

கிக் ஸ்டார்ட் + அலாய் வீல்: ரூ50,100

செல்ஃப் ஸ்டார்ட் + ஸ்போக் வீல்: ரூ.51,050

செல்ஃப் ஸ்டார்ட் + அலாய் வீல்கள்: ரூ.52,100

செல்ஃப் ஸ்டார்ட் + ஸ்போக் வீல் + டிஸ்க் பிரேக் மாடல்: ரூ.53,900

[அனைத்தும் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை]

வண்ணங்கள்

வண்ணங்கள்

2015 ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கின் வண்ணங்கள்!

வண்ணங்கள்

வண்ணங்கள்

2015 ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கின் வண்ணங்கள்!

வண்ணங்கள்!

வண்ணங்கள்!

2015 ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கின் வண்ணங்கள்!

வண்ணங்கள்

வண்ணங்கள்

2015 ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கின் வண்ணங்கள்!

வண்ணங்கள்

வண்ணங்கள்

2015 ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கின் வண்ணங்கள்!

வண்ணங்கள்

வண்ணங்கள்

2015 ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கின் வண்ணங்கள்!

வண்ணங்கள்

வண்ணங்கள்

2015 ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கின் வண்ணங்கள்!

லிட்டருக்கு 102.5 கிமீ மைலேஜ் தரும் ஹீரோ பைக்

லிட்டருக்கு 102.5 கிமீ மைலேஜ் தரும் ஹீரோ பைக்

01. லிட்டருக்கு 102.5 கிமீ மைலேஜ் தரும் ஹீரோ பைக்...

02. வந்துவிட்டது புதிய பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200...

03.பல்சர் வரிசையில் அடுத்து ஒரு புதிய 150சிசி பைக் அறிமுகம்...

 
English summary
Indian two-wheeler giant, Hero MotoCorp is planning on introducing several new products. They also plan on updating and revamping their existing lineup of two-wheelers in India. Now the two-wheeler manufacturer has updated its Passion Pro motorcycle for 2015. They have provided the motorcycle with new colours and more power.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark