ஹீரோ கரிஷ்மா, கரிஷ்மா இசட்எம்ஆர் பைக்குகளின் உற்பத்தி நிறுத்தம்

By Ravichandran

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தங்களின் கரிஷ்மா மற்றும் கரிஷ்மா இசட்எம்ஆர் மோட்டார்சைக்கிள்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டது.

பல்வேறு நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வரும் நிலையில், சில நிறுவனங்கள் தாங்கள் அறிமுகம் செய்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களின் தயாரிப்புகளை நிறுத்துவதும் நடக்கிறது.

இப்படியாக, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் நிறுத்தபட்ட கரிஷ்மா மற்றும் கரிஷ்மா இசட்எம்ஆர் மோட்டார்சைக்கிள்களின் உற்பத்தி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

கரிஷ்மா, கரிஷ்மா இசட்எம்ஆர் பற்றி...

கரிஷ்மா, கரிஷ்மா இசட்எம்ஆர் பற்றி...

கரிஷ்மா மற்றும் கரிஷ்மா இசட்எம்ஆர் மோட்டார்சைக்கிள்கள் தான், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் தயாரிக்கபட்டு வந்த மிக முக்கியமான மோட்டார்சைக்கிள்களாக இருந்தன.

சமீபத்தில் தான், ஹீரோ மோட்டோகார்ப்-பின் கரிஷ்மா மற்றும் கரிஷ்மா இசட்எம்ஆர் மோட்டார்சைக்கிள் பொலிவு கூட்டபட்டு வெளியிடபட்டது.

உற்பத்தி நிறுத்ததிற்கான காரணம்;

உற்பத்தி நிறுத்ததிற்கான காரணம்;

கரிஷ்மா மற்றும் கரிஷ்மா இசட்எம்ஆர் மோட்டார்சைக்கிள்களின் குறைந்த விற்பனையின் காரணத்தாலேயே, அவற்றின் உற்பத்தி நிறுத்தபடுவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பொலிவு கூட்டபட்டு வெளியிடபட்ட கரிஷ்மா மற்றும் கரிஷ்மா இசட்எம்ஆர் மோட்டார்சைக்கிள்களும் வாடிக்கையாளர்களின் மனதை கவர தவறியதால், இந்த 2 மோட்டார்சைக்கிள்களின் உற்பத்தியை நிறுத்த வேண்டியது கட்டாயமாகியது.

விற்காத பைக்குகளின் குவியல்;

விற்காத பைக்குகளின் குவியல்;

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கபட்டு வந்த இந்த 2 மோட்டார்சைக்கிளும் சரியாக விற்காததால், பல்வேறு டீலர்ஷிப்களிடம் 2014-ஆம் ஆண்டின் விற்காத 2 பைக்குகளின் குவியல், அதிக அளவில் சேர்ந்துள்ளது.

புக்கிங்களும் நிறுத்தம்;

புக்கிங்களும் நிறுத்தம்;

இந்த 2 பைக்குகளும் சரியாக விற்பனையாக காரணத்தால், பல்வேறு டீலர்ஷிப்கள் இவற்றின் புக்கிங்களை ஏற்பதை கூட நிறுத்தி விட்டனர்.

ஏராளமான ஆஃபர்கள்;

ஏராளமான ஆஃபர்கள்;

அதிக அளவில் குவிந்துள்ள கரிஷ்மா மற்றும் கரிஷ்மா இசட்எம்ஆர் மோட்டார்சைக்கிளை விற்று தீர்த்து விட வேண்டிய நோக்கத்தில், இதன் டீலர்ஷிபகள் ஏராளமான சலுகைகளை வழங்கி வருகின்றனர்.

மதிப்பு வீழ்ச்சி;

மதிப்பு வீழ்ச்சி;

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், இந்த கரிஷ்மா மற்றும் கரிஷ்மா இசட்எம்ஆர் மோட்டார்சைக்கிள்கள் விற்று தீர்வதற்கு நாள் அதிகம் ஆக ஆக, அவற்றின் மதிப்பு பெரும் அளவில் விழ்ச்சி அடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

கரிஷ்மா மற்றும் கரிஷ்மா இசட்எம்ஆர் மோட்டார்சைக்கிள்கள் இரண்டும் பொதுவான, 223சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இவற்றின் இஞ்ஜின் 20 பிஹெச்பி-யையும், 19.7 என் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

திறன், மைலேஜ்;

திறன், மைலேஜ்;

இந்த இரு மோட்டார்சைக்கிள்களிலும், ஃப்யூவல் இஞ்ஜெக்‌ஷன் முறை பயன்படுத்தபடுவதால், இதன் மைலேஜ் திறன் அதிகமாக உள்ளது.

இரு மோட்டார்சைக்கிள்களும் அதிகபடியாக, மணிக்கு 129 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேம்பாடுகள் செய்யபடுமா?

மேம்பாடுகள் செய்யபடுமா?

விற்பனை குறைந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த கரிஷ்மா மற்றும் கரிஷ்மா இசட்எம்ஆர் மோட்டார்சைக்கிள்கள் மேம்பாடுகள் செய்யபட்டு வெளியிடபடுமா, இல்லையா என்பது குறித்து எந்த விதமான தெளிவான தகவல்களும் வெளியிடபடவில்லை.

2016 அட்டோ எக்ஸ்போவில் பங்கேற்பு;

2016 அட்டோ எக்ஸ்போவில் பங்கேற்பு;

இந்த கரிஷ்மா மற்றும் கரிஷ்மா இசட்எம்ஆர் மோட்டார்சைக்கிள்களின் என்னவாக இருந்தாலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

இந்த 2016 அட்டோ எக்ஸ்போவில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தைகளுக்கும், சர்வதேச சந்தைகளுக்கும் பல்வேறு புதிய தயாரிப்புகளை காட்சிபடுத்தவும், அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.

Most Read Articles
English summary
Hero MotoCorp has stopped the production of their flagship products - Karizma & Karizma ZMR motorcycles. Recently, Hero MotoCorp provided both their bikes with a facelift. Even then, it did not work well with the customers. These Motorcycles production is stopped due to low sales.
Story first published: Saturday, December 19, 2015, 14:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X