எக்ஸ்ட்ரா சக்தி, ரொம்பவே செக்ஸீ.. வந்துவிட்டது புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்!
கூடுதல் சக்தி மற்றும் கவர்ச்சிகரமான டிசைன் அம்சங்களுடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக்கின் ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடலில் இருக்கும் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன் சிறப்பம்சங்கள்
புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் பைக்கில் கூடுதலாக வைசர், இரட்டை எல்இடி பைலட் விளக்குகள் கொண்ட ஹெட்லைட், ஸ்பிளிட் சீட், புதிய கிராப் ரெயில், புகைப்போக்கி குழாய் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் எல்இடி டெயில்லைட் க்ளஸ்ட்டரும் கவர்ச்சிகரமாக இருக்கிறது.

எஞ்சின்
ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் பைக்கில் இருக்கும் 149.2சிசி ஏர்கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 15.6 எச்பி பவரையும், 13.5 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

டிஸ்க் பிரேக் சிஸ்டம்
முன்புற, பின்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக் சிஸ்டம் உள்ளது. ட்யூப்லெஸ் டயர்கல், சைடு ஸ்டான்டு போட்டிருப்பதை எச்சரிக்கும் வசதி, அனலாக்- டிஜிட்டல் மீட்டர் கன்சோல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

வண்ணங்கள்
பாந்தர் பிளாக், ஃபியரி ரெட், மெர்குரிக் சில்வர், பிளாக்- ரெட், பைரோ ஆரஞ்ச் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

விலை விபரம்
புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் பைக் சென்னையில் ரூ.71,515 விலையிலும், டெல்லியில் ரூ.72,725 விலையிலும், மும்பையில் ரூ..73,194 விலையிலும், பெங்களூரில் விலையிலும் கிடைக்கும். அனைத்து எக்ஸ்ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








