கூடுதல் டார்க் திறனுடன் வந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்!

Written By:

கூடுதல் டார்க்கை வழங்கும் விதத்தில், ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் ஸ் பைக்கின் எஞ்சின் மேம்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்த பைக் இதுவரை ஷோரூமிற்கு வரவில்லை.

Hero Xtreme Sports
  

இந்த பைக் கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக்கின் சற்று கூடுதல் சக்தி கொண்ட மாடலாக இது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கில் 149.2சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 15.2 பிஎச்பி பவரையும், 12.8 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டதாக இருந்தது.

இந்த நிலையில், இந்த பைக் எஞ்சின் கூடுதல் டார்க்கை வழங்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது 7,000ஆர்பிஎம்.மில் 13.5 என்எம் டார்க்கை வழங்கும் என்று ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இணைய தகவல் குறிப்பு பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

150சிசி செக்மென்ட்டில் அதிக சக்திகொண்ட மாடலாக இது நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இந்த புதிய பைக் மாடல் இளைஞர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary

 Hero MotoCorp's Xtreme Sports features an air-cooled, single cylinder 149.2cc engine. Previously this engine developed 12.6 Nm of peak torque output. Now the official website confirms that now the engine delivers 13.5 Nm of torque and 15.2 horsepower.
Story first published: Monday, February 16, 2015, 13:34 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark