உலகின் அதிக மைலேஜ் தரும் பைக் ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட்!

Written By:

சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பஜாஜ் பிளாட்டினா பைக் லிட்டருக்கு 96.9 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உலகின் அதிக மைலேஜ் தரும் பைக் என்ற பெருமையை அந்த பைக் பெற்றது. இந்த நிலையில், பஜாஜ் பிளாட்டினாவை மைலேஜில் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது ஹீரோ ஸ்பிளென்டர் ஐ- ஸ்மார்ட்.

மேலும், லிட்டருக்கு 100 கிமீ.,க்கும் அதிகமான மைலேஜ் என்ற புதிய மைல்கல்லையும் இந்த பைக் கடந்திருக்கிறது. ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக்கின் மைலேஜ் உள்ளிட்ட முக்கிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

சான்று

சான்று

கடந்த மாதம் மத்திய அரசின் கீழ் சுய அதிகாரம் படைத்த அமைப்பாக இயங்கும் சர்வதேச ஆட்டோமொபைல் தொழில்நுட்ப மையம்(iCAT) இந்த பைக்கை சோதனை செய்து சான்று வழங்கியது. இதன்படி, எதற்போது உலகின் அதிக மைலேஜ் தரும் பைக் என்ற பெருமையை ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பெற்றிருக்கிறது.

 ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டம்

ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டம்

இந்த பைக் அதிக எரிபொருள் சிக்கனத்தை தருவதற்கு ஸ்டார்ட்/ ஸ்டாப் முக்கிய காரணமாக இருக்கிறது. சிக்னல் உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் வண்டி நிற்கும்போது எஞ்சின் தானாக அணைந்துவிடும். கிளட்ச் பிடிக்கும்போது மீண்டும் எஞ்சின் உயிர்ப்பித்துவிடும். இந்த ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டத்தை தேவையில்லாத சமயங்களில் அணைத்து வைப்பதற்கு சுவிட்ச் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 7.8 பிஎஸ் பவரையும், 8.04 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 97.2சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 4 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

மைலேஜ்

மைலேஜ்

இந்த பைக்கிற்கு iCAT அமைப்பு அளித்துள்ள சான்றின்படி, சோதனை நிலைகளில் லிட்டருக்கு 102.5 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

சென்னையில் ஸ்போக் வீல் கொண்ட ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக் ரூ.50991 எக்ஸ்ஷோரூம் விலையிலும், அலாய் வீல் கொண்ட மாடல் ரூ.52,008 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

 
English summary
Hero MotoCorp Splendor iSmart has been declared as the most fuel efficient motorcycle in the world. The commuter motorbike recorded 102.5 kpl, which is phenomenal in this age.
Story first published: Wednesday, April 8, 2015, 17:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark