கூடுதல் சிறப்பம்சங்களுடன் 2015 ஹோண்டா ஆக்டிவா ஐ மற்றும் ஏவியேட்டர்!

By Saravana

புதிய வண்ணங்கள், கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஹோண்டா ஆக்டிவா ஐ மற்றும் ஏவியேட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, பெண் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் வந்துள்ளது. இந்த புதிய ஸ்கூட்டர்களில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம். புதிய ஹோண்டா ஆக்டிவா ஐ மற்றும் ஏவியேட்டர் ஸ்கூட்டர்களின் விபரங்கள் தலா மூன்று ஸ்லைடுகளில் படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

 2015 ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர்

2015 ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர்

புதிய ஆக்டிவா ஸ்கூட்டரில் இப்போது பெண் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் கிராஃபிக்ஸ் டிசைனர் ஸ்டிக்கர்களுடன் வந்திருக்கின்றன. சாதாரண மாடலில் கருப்பு வண்ணமும், டீலக்ஸ் வேரியண்ட்டில் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

 முக்கிய சிறப்பம்சங்கள்

முக்கிய சிறப்பம்சங்கள்

காம்பி பிரேக் சிஸ்டம், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் ஹோண்டாவின் எச்இடி தொழில்நுட்பம், இலகு எடை ஆகியவை இந்த ஸ்கூட்டருக்கு கூடுதல் மதிப்பை சேர்க்கின்றன. எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. அதிகபட்சமாக 8 எச்பி பவரை அளிக்கும் 109.2 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

 விலை

விலை

ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டரின் ஸ்டான்டர்டு மாடல் ரூ.46,213 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீலக்ஸ் வேரியண்ட் ரூ.46,703 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். இந்த ஸ்கூட்டருக்கு முன்பதிவு முடிந்துவிட்டது. இந்த மாத இறுதியில் டெலிவிரி துவங்கும். அடுத்த மூன்று ஸ்லைடுகளில் புதிய ஏவியேட்டர் ஸ்கூட்டர் மாடலின் சிறப்பம்சங்களை காணலாம்.

2015 ஹோண்டா ஏவியேட்டர்

2015 ஹோண்டா ஏவியேட்டர்

ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டரில் இப்போது புதிதாக ரிச் பிரவுன் என்ற பழுப்பு வண்ணத்திலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதுதவிர, முந்தைய சில்வர், சிவப்பு, வெள்ளை மற்றும் கறுப்பு வண்ணங்களிலும் கிடைக்கும்.

 முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

ஹோண்டா ஏவியேட்டரில் முன்புற டிஸ்க் பிரேக் கொண்ட மாடலிலும் கிடைக்கும். இதனை டீலக்ஸ் வேரியண்ட்டாக ஹோண்டா விற்பனை செய்கிறது. இதுதவிர்த்து, 5 ஸ்போக்குகள் கொண்ட 12 இன்ச் சில்வர் அலாய் வீல்கள், ட்யூப்லெஸ் டயர்கள், 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட இருக்கைக்கு கீழே ஸ்டோரேஜ் வசதி ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 109 சிசி ஏர்கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 8.0 எச்பி பவரையும், 8.77 என்எம் டார்க்கையும் வழங்கும்.

ஏவியேட்டர் விலை

ஏவியேட்டர் விலை

ஹோண்டா ஏவியேட்டரின் டிஸ்க் பிரேக் இல்லாத ஸ்டான்டர்டு மாடல் ரூ.50,863 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், முன்புறம் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்ட ஏவியேட்டர் டீலக்ஸ் மாடல் ரூ.56,209 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

Most Read Articles
English summary
The Japanese based two-wheeler company has now provided its most humble scooter with an update. Honda Activa i and Aviator gets new colour options and two variant options as well in India.
Story first published: Friday, June 26, 2015, 10:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X