ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கின் ஸ்மார்ட்போன் 'ஆப்'பிற்கு பெரும் வரவேற்பு!

Written By:

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் மூலம் சமீபத்தில் வெளியிடபட்ட, ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கிற்கான ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் இதுவரை 10,000 முறை டவுன்லோட் செய்யபட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனம், சில தினங்களுக்கு முன்பு தான், தங்களின் ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தனர்.

மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த

இதற்கிடையில், சில தினங்களுக்கு முன்பு வெளியிடபட்ட ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் ஆப் (அப்ளிகேஷன்) குறித்தும், இந்த ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக் குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் ஆப் பற்றி...

ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் ஆப் பற்றி...

ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் ஆப், சுமார் 7 தினங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்யபட்டது. அதற்குள்ளாக, இந்த ஆப் சுமார் 10,000 முறை பதிவிறக்கம் செய்யபட்டுள்ளது.

இந்த ஆப் மூலமாக, ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான அம்சங்களை வழங்குகிறது.

இந்த ஆப்-பில், ஒப்பீடுகள், விலை விவரங்கள், பைக் தொடர்பான விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.

தற்போதைய நிலையில், இந்த ஆப், சிபி ஹார்னெட் 160 ஆர் ஆப், கூகிள் பிளே ஸ்டோரில் மட்டுமே கிடைகின்றது.

சிறப்பம்சம்;

சிறப்பம்சம்;

இந்த ஆப்-பின் முக்கியமான அம்சமே, வாடிக்கையாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்த ஹோண்டா நிறுவனம் வழங்கும் பல புதுமையான அனுபவங்களை பெற முடியும்.

இந்த ஆப் மூலம், வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் தொடர்பான புகைப்படங்கள் வழங்கபடுகிறது.

இவை அனைத்தையும் தாண்டி, இந்த ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள், ரெவ்-விங் எனப்படும் இஞ்ஜின் இயக்கபடும் அனுபவத்தையும் உணர முடியும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

புக்கிங்;

புக்கிங்;

ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் அப்ளிகேஷன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் மனதிற்கு பிடித்த இந்த பைக்கை வெரும் 5,000 ரூபாயில் புக்கிங்-கும் செய்யலாம் என்பது குறிப்பிடதக்கது.

இந்த ஆப்-பில் உள்ள ‘புக் நௌவ்' என்ற தேர்வை கிளிக் செய்யும் போது, வாடிக்கையாளர்களிடம் சில தகவல்கள் கேட்கபடுகின்றது. இதையடுத்து,

ஆன்லைனில் பணத்தை செலுத்தும் பகுதிக்கு திசைமாற்றப்படுகிறது.

புக்கிங் மற்றும் பணபரிமாற்றம் முடிவடைந்த பின், புக்கிங் செய்யபட்ட பைக், தோராயமாக எந்த நாளில் எந்த நேரத்தில் டெலிவரி செய்யபடலாம் என்ற தகவல்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கபடுகிறது.

ஸ்பெஷல் ஆப் மூலம் பைக்களின் புக்கிங்கள் ஏற்கபடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

கிடைக்கும் நகரங்கள்;

கிடைக்கும் நகரங்கள்;

இந்த ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக், இளைஞர்களை முக்கியமான இலக்கு வாடிக்கையாளர்களகாக பாவித்து வடிவமைக்கபட்டுள்ளது.

ஆரம்பகட்டத்தில், ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக், 21 நகரங்களில் கிடைக்கும் வகையில் முதலில் ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தது.

ஆனால், இந்த ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் ஆப் பெற்ற அபார வரவேற்பை அடுத்து, ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக்கை இந்தியாவின் 53 நகரங்களில் விற்கும் வகையில் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக், நியோ ஆரஞ்ஜ் மெட்டாலிக், பியர்ல் அமேஸிங் வைட், ஸ்போர்ட்ஸ் ரெட், பியர்ல் ஸைரன் ப்ளூ மற்றும் பியர்ல் நைட்ஸ்டார் பிளாக் உள்ளிட்ட 5 நிறங்களில் கிடைக்கின்றது.

விலை;

விலை;

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் மோட்டார்சைக்கிள், 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் மோட்டார்சைக்கிள் குறித்த விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் (ஸ்டாண்டர்ட்) - 79,900 ரூபாய்

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் (சிபிஎஸ்) - 84,400 ரூபாய்

இந்த விலை விவரங்கள் அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலை என்பது குறிப்பிடதக்கது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஹார்னெட் 160ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

English summary
Honda Motorcycle and Scooter India Pvt. Ltd. has launched their all-new CB Hornet 160R App. Within some 7 days of launch, this app has witnessed over 10,000 downloads. As of now, this app is available only on Google Play Store, with the name - the CB Hornet 160R app
Story first published: Friday, December 18, 2015, 16:26 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark