ஹோண்டா சிபி ஷைன் இப்போது புதிய வண்ணங்களில் கிடைக்கும்!

Written By:

ஹோண்டா சிபி ஷைன் புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன், விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் 2 சக்கர வாகனங்களையும், 4 சக்கர வாகனங்களையும் அடிக்கடி மேம்படுத்தி வழங்குகின்றன. புதிய ஹோண்டா சிபி ஷைன் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் பார்க்கலாம்...

புதிய 2015 ஹோண்டா சிபி ஷைன்;

புதிய 2015 ஹோண்டா சிபி ஷைன்;

2015-ஆம் ஆண்டிற்காக, ஹோண்டா சிபி ஷைன் புதிதாக மேம்படுத்தி வழங்கபட்டுள்ளது.

புதிய அம்சங்கள்;

புதிய அம்சங்கள்;

இந்த புதிய 2015 ஹோண்டா சிபி ஷைன் மோட்டார்சைக்கிள், ஸ்டைல் மிக்க டீகேல்கள் உடன், புதிய வண்ணங்களில் கிடைக்கின்றது.

ஹோண்டா வடிவமைப்பாளார்கள், புதிய சிபி ஷைன் பைக்கிற்கு புதிய பிளாக் விண்ட் டிஃப்ளெக்டர் வழங்கியுள்ளனர். மேலும், பற்றித் திருகபட்டுள்ள (ட்வீக்) டெய்ல் லைட் உள்ளது. இது, பைக்கின் அழகை கூட்டுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஹோண்டா மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், பரிசோதிக்கபட்டு உபயோகிக்கபட்ட 125 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ள இதன் இஞ்ஜின், 11 பிஹெச்பி-யையும், 10 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

அதிக மைலேஜ் வழங்க வசதியாக, புதிய ஹோண்டா சிபி ஷைன் பைக்-கிற்கு ஹோண்டா எகோ டெக்னாலஜி பொருத்தபட்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

4 புதிய வண்ணங்கள் மற்றும் டீகேல்களில் இருந்து, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த வகையில், புதிய 2015 ஹோண்டா சிபி ஷைன் பைக்கை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த புதிய சிபி ஷைன், இம்பீரியரல் ரெட் மெட்டாலிக், மேபிள் பிரௌன் மெட்டாலிக், கெனி கிரே மெட்டாலிக் மற்றும் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கின்றது.

ஸ்டைலிஷ் மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட புதிய டீகேல் டிசைன் அனைத்து நிற தேர்வுகளுக்கும் பொதுவாக வர உள்ளது.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

மேம்பாடுகள் செய்த சாக்கை முன்நிறுத்தி, ஹோண்டா நிறுவனம், தங்களின் புதிய சிபி ஷைன் பைக்கின் விலைகளை உயர்த்தியுள்ளனர்.

மேம்படுத்தபட்ட மோட்டார்சைக்கிள்களின் விலை விவரங்கள்;

ஹோண்டா சிபி ஷைன் (செல்ஃப்-ஸ்டார்ட் மற்றும் டிரம் பிரேக்குகள் கொண்டது) - 55,559 ரூபாய்

ஹோண்டா சிபி ஷைன் (செல்ஃப்-ஸ்டார்ட் மற்றும் டிரம் பிரேக்குகள் கொண்டது) - 57,885 ரூபாய்

ஹோண்டா சிபி ஷைன் (செல்ஃப்-ஸ்டார்ட் மற்றும் டிரம் பிரேக்குகள் கொண்டது) - (சிபிஎஸ்) - 60,808 ரூபாய்

குறிப்பு ; அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலை என்பது குறிப்பிடதக்கது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஹார்னெட் 160ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

செய்திகள் உடனுக்குடன்…

செய்திகள் உடனுக்குடன்…

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

English summary
Honda CB Shine is updated with New Pricing and Colours, for the year 2015. This Honda CB Shine 2015 Bike comes with stylish decals and many new colour choices. CB Shine motorcycle can be chosen between four new colour and decal options.
Story first published: Tuesday, December 15, 2015, 15:44 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark