ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் புதிய வண்ணங்களில் வருகிறது!

Written By:

சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் நடந்த ஹோண்டா ரெவ்ஃபெஸ்ட்டில் அறிமுகம் செய்யப்பட்ட 5 மாடல்களில் புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கும் ஒன்று. இந்த புதிய மாடலில் சொல்லிக்கொள்ளும்படியான மாற்றங்கள் இல்லை. ஆனால், புதிய வண்ணங்களில் வர இருப்பது இந்த விழா மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த செக்மென்ட்டில் அதிகம் விரும்பப்படும் இந்த பைக்கின் புதிய வண்ணங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என நம்பலாம்.

புதிய மாடல் இல்லை

புதிய மாடல் இல்லை

சர்வதேச அளவில் இரட்டை ஹெட்லைட் கொண்ட சிபிஆர் 250ஆர் மாடல் விற்பனையில் இருக்கிறது. ஆனால், அந்த மாடல் இப்போது வரவில்லை. அதற்கு பதிலாக இப்போது இருக்கும் ஒற்றை ஹெட்லைட் அமைப்பு கொண்ட மாடலை புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா.

எஞ்சின்

எஞ்சின்

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் மாடலின் எஞ்சின் பவர் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது வந்திருக்கும் புதிய மாடலின் எஞ்சினிலும் எந்த மாற்றங்களும் இல்லை. இந்த பைக்கின் எஞ்சின் அதிகபட்சமாக 26 பிஎஸ் பவரையும், 22.9 என்எம் டார்க்கையும் வழங்கும் 249சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

இப்போது உள்ளது போன்றே புதிய மாடலும் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்ட மாடலிலும், இல்லாத மாடலிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

ஏற்றுமதி

ஏற்றுமதி

இந்தியாவில் இருந்து இந்த புதிய மாடலை மெக்ஸிகோ, சிலி மற்றும் பெரு உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

கேடிஎம் ஆர்சி200, கவாஸாகி நின்ஜா 300 போன்ற மாடல்களுக்கு இந்த புதிய புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் நேரடி போட்டியாக இருக்கும்.

 
English summary
Honda CBR 250R Gets Cosmetic updates with new colors.
Story first published: Tuesday, August 4, 2015, 18:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark