ஜூலையில் வரும் புதிய ஹோண்டா சிபிஎஃப்650 எஃப் பைக்: ஏமாற்றத்தை தருமோ?

Written By:

அடுத்த மாதம் ஹோண்டா சிபிஎஃப் 650 எஃப் சூப்பர் ஸ்போர்ட் ரக மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட இருக்கும் ஹோண்டாவின் முதல் ஸ்போர்ட்ஸ் பைக் என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆனால், இளைஞர்களின் எதிர்பார்ப்பை இந்த மாடல் எந்தளவு பூர்த்தி செய்யும் என்பதில் ஐயப்பாடுகளும், முணுமுணுப்புகளும் எழுந்திருக்கின்றன. அதுகுறித்த ஒரு பார்வை...

இந்தியாவில் உற்பத்தி

இந்தியாவில் உற்பத்தி

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த பைக் முதல்முறையாக இந்தியர்களுக்கு காட்டப்பட்டது. அப்போதே, இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டியது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் என்ற அறிவிப்பும் இந்த பைக்கின் மீதான ஆவலை அதிகரித்தது.

கூடுதல் ஆக்சஸெரீகள்

கூடுதல் ஆக்சஸெரீகள்

இந்தியாவுக்காக வைன்ட்ஸ்கிரீன், சாரி கார்டு உள்ளிட்ட கூடுதல் ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டு, சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. எனவே, விரைவில் மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்புடன் இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கின் 4 சிலிண்டர் எஞ்சினும் இளசுகள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியிருப்பதற்கு ஒரு காரணம். இந்த பைக்கில் இருக்கும் 649சிசி எஞ்சின் அதிகபட்சமாக 85.8 எச்பி பவரையும், 63 என்எம் டார்க்கையும் வழங்கும். இது திரவ குளிர்விப்பு அமைப்பு கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இங்கேதான் ஏமாற்றம்

இங்கேதான் ஏமாற்றம்

இந்தியாவில் தயாராகும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் ஸ்போர்ட்ஸ் பைக் என்ற பெருமையை பெற்றிருந்தாலும், இந்த பைக்கிற்கு 5 முதல் 8 சதவீத உதிரிபாகங்களை மட்டுமே இந்தியாவிலிருந்து பெறுவதற்கு ஹோண்டா முடிவு செய்துள்ளது. இதனால், விலையை நிர்ணயிப்பதில் ஹோண்டாவுக்கு சற்று குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு.

 விலையும் அதிகம்?

விலையும் அதிகம்?

இந்த மோட்டார்சைக்கிளை ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் விலையில் அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதே செக்மென்ட்டில் உள்ள டிஎன்டி600ஐ மற்றும் கவாஸாகி நின்ஜா 650 போன்ற மாடல்களை ஒப்பிடும்போது, விலை அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்களைவிட விலை அதிகமாக இருக்கும் என்பது இந்திய இளைஞர்கள் மத்தியில் சற்று முக சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெலிவிரி

டெலிவிரி

இருப்பினும், விலையை பொறுத்தே நாம் எதையும் கூற முடியும். அதற்கு அடுத்த மாதம் வரை பொறுத்திருக்க வேண்டியது அவசியம். அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு, ஆகஸ்ட்டில் டெலிவிரி துவங்கப்படும்.

 

English summary
This is Honda's very first super sport motorcycle to be offered in India as a Completely Knocked Down unit. Problem is that CBR 650F will only witness 5-8 percent localisation of parts. Honda is aiming to price this super sport motorcycle in the INR 7,00,000 to INR 8,00,000 price bracket. This makes it much more expensive than its competitors in this segment.
Story first published: Friday, June 19, 2015, 9:01 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more