மேம்படுத்தப்பட்ட ஹோண்டா சிபிஆர் 500 ஆர் பைக் வெளியாகிறது

Written By:

ஹோண்டா சிபிஆர் 500 ஆர் புதிய உத்வேகம் ஊட்டும் தோற்றத்துடன், ஈர்க்கும் சிறப்பம்சங்களுடன் வெளியாக உள்ளது.

ஹோண்டா மோட்டர்சைக்கிள்ஸ் நிறுவனம் பல்வேறு நாடுகளில் தங்களது ஆரம்பக்கட்ட சிபிஆர் ரக வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

Honda Bike
  

சிபிஆர் 250 ஆர், சிபிஆர் 300 ஆர் மற்றும் சிபிஆர் 500 ஆர் பலதரப்பட்ட சாலைகளுக்கு ஏற்றவாறு, பல்வேறு நாட்டு இரு சக்கர வாகன சந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

அடிப்படையான சிபிஆர் ரக மோட்டர்சைக்கிள்களில், சிபிஆர் 500 ஆர் பைக் மட்டுமே இரண்டு சிலிண்டர் இஞ்ஜினுடன் வெளியாகிறது. இந்த சிபிஆர் 500 ஆர் ரக வாகனங்களை மறு வடிவமைத்து, ஏற்கனவே கிடைக்கும் சந்தைகளில் ஹோண்டா நிறுவனம் வெளியிட உள்ளது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ என்ற இடத்தில் அக்டோபர் 15-ல், இரு சக்கர வாகனங்களுக்கான கண்காட்சி நடைபெற உள்ளது. புதிய அம்சங்களுடன் மறு வடிவமைக்கப்படும் சிபிஆர் 500 ஆர் மோட்டர்சைக்கிள் அந்த கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

புதிய மறு வடிவமைப்பில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், மிக சீற்றமான தோற்றத்துடன் இந்த புதிய சிபிஆர் 500 ஆர் வெளியாக உள்ளது. இதன் முகப்பு தோற்றம், பெரிய சிபிஆர் ரக பைக் மாடல்களை போல் தோற்றம் அளிக்கும். இதில் உள்ள இரட்டை எல்ஈடி விளக்குகள் இதன் முகப்பு அழகை கூட்டுகின்றது.

சிபிஆர் 500 ஆர் ரக மோட்டர்சைக்கிளின் மேம்படுத்தப்பட்ட தோற்றத்திற்கு சைலன்சரும் மறு வடிவமைக்கபடுகிறது. இந்த மோட்டர்சைக்கிளில் மஃப்லரின் எடையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் இஞ்ஜினியர்கள் கவனம் செலுத்துகின்றனர். இதற்கு முன்பு வெளியான மோட்டார்சைக்கிளை காட்டிலும், இதில் மஃப்லரின் அளவு சிறியதாக இருக்கும்.

முன் சக்கர சஸ்பென்ஷனில் ப்ரீலோட் அட்ஜஸ்ட்மண்ட் வசதியை ஹோண்டா வழங்குகிறது. நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவாக, இந்த சிபிஆர் 500 ஆர் மோட்டார்சைக்கிளில் பெரிய பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டு உள்ளது. எரிபொருளை எளிதாக நிரப்ப ஏதுவாக மூடும் படியான எரிபொருள் டேங்க் உள்ளது.

இந்த மறுவடிவமைக்கப்பட்ட சிபிஆர்500 ஆர் பைக் பல்வேறு சந்தைகளில் 2016-ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து கிடைக்கும். இது இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The CBR500R is their only twin-cylinder engine in Honda's range of entry level CBR motorcycles. Honda will be restyling this motorcycle and will be offering it in markets where it is already available.
Story first published: Sunday, October 11, 2015, 12:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark