ஜூலையில் 'மேட் இன் இந்தியா' புதிய ஹோண்டா 650சிசி ஸ்போர்ட்ஸ் பைக் ரிலீஸ்!

இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட இருக்கும் ஹோண்டா நிறுவனத்தின் புதிய 650சிசி ஸ்போர்ட்ஸ் பைக் ஜூலை மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

நடப்பு ஆண்டில் 15 புதிய இருசக்கர வாகன மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது. இதில், புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் வர இருக்கின்றன. அதில், ஒன்றாக ஹோண்டா சிபிஆர்650எஃப் மாடலை வரும் ஜூலை மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது ஹோண்டா நிறுவனம். இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


தினசரி பயன்பாடுக்கான மாடல்

தினசரி பயன்பாடுக்கான மாடல்

ஓட்டுபவருக்கு மிகச்சிறந்த ரைடிங் பொசிஷனை கொண்ட என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்காக வர இருக்கிறது. தினசரி பயன்பாடு மற்றும் நீண்ட தூர பயணங்கள் விரும்புவோருக்கு சரியான சாய்ஸாக இருக்கும்.இருவர் அமர்ந்து செல்லும் இருக்கை வசதி கொண்டதாக இருக்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 4 சிலிண்டர் 649சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 85.8 பிஎச்பி பவரையும், 63 என்எம் டார்க்கையும் வழங்கும். இதனுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைந்து செயல்புரியும்.

மேட் இன் இந்தியா

மேட் இன் இந்தியா

இந்த பைக் இந்தியாவில் உதிரிபாகங்களாக தருவிக்கப்பட்டு அசெம்பிள் செய்யப்பட உள்ளது. இதனால், போட்டியாளர்களைவிட மிக சவாலான விலையில் கொண்டு வரலாம் என்றுமேலும், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட இருக்கும் ஹோண்டாவின் முதல் 4 சிலிண்டர் எஞ்சின் கொண்ட பைக் மாடலும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கும் ஆன்ரோடு விலை

எதிர்பார்க்கும் ஆன்ரோடு விலை

ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் ஆன்ரோடு விலையில் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Honda India had confirmed that several of these products will be launched in India. Out of them the most anticipated launch is of their CBR650F model. The Japanese manufacturer had promised to launch this product soon and also committed to local assembly to achieve lower pricing of the motorcycle.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X