ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

Posted By:

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் ஹோண்டா முதல் ஸ்போர்ட்ஸ் பைக் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஹோண்டா Revfest என்ற பெயரில் சென்னை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெறும் விழாவில் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் வேறு சில புதிய மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

மும்பையில் நடந்து வரும் விழாவிலிருந்து எமது செய்தியாளர் தரும் தகவல்கள் இங்கே வழங்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தித் தொகுப்பில் புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம். கூடுதல் விபரங்கள் ஸ்லைடரில் காத்திருக்கின்றன.

 பிரத்யேக ஷோரூமில் மட்டும்...

பிரத்யேக ஷோரூமில் மட்டும்...

இந்த புதிய ஹோண்டா சிபிஆர்650எஃப் பைக் Wing World என்ற பெயரில் நாடு முழுவதும் 12 நகரங்களில் உள்ல பிரத்யேக ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய பைக்கில் 87 பிஎஸ் பவரையும், 63 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 4 சிலிண்டர்கள் கொண்ட 649சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. புரொகிராம்டு ஃபியூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் உள்ளது. இந்த பைக்கில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சஸபென்ஷன் & பிரேக்

சஸபென்ஷன் & பிரேக்

முன்புறத்தில் 41மிமீ டெலிஸ்கோப்பிக் போர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளது.

 ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக் தொழில்நுட்பம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. முன்புறத்தில் 320மிமீ விட்டம் கொண்ட ட்வின் பிஸ்டன் காலிபர்களுடன் கூடிய டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் சிங்கிள் பிஸ்டன் காலிபர் கொண்ட 240மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக் சிஸ்டம் உள்ளது.

ஒரே வண்ணம்

ஒரே வண்ணம்

புதிய ஹோண்டா சிபிஆர் 650எஃப் பைக் சிவப்பு- வெள்ளை வண்ணக் கலவை கொண்ட என்ற ஒரேயொரு வண்ணத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

விலை

விலை

ரூ.7.30 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், ரூ.7.61 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

 

English summary
The Honda CBR650F has been launched in India today by the Japanese motorcycle manufacturer Honda. This has been a much awaited motorcycle in this segment as Kawasaki, Benelli, Harley-Davidson, Hyosung, Triumph and Ducati have offerings in this segment. The Honda CBR650F is built completely in India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark