ஆர்வத்தை கொப்பளிக்க செய்யும் புதிய ஹோண்டா 125சிசி ஸ்கூட்டர்!!

Written By:

இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முன்னிலை வகித்து வரும் ஹோண்டா நிறுவனம் அடுத்து ஒரு புதிய 125சிசி ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த முறை ஆக்டிவா பிராண்டில் இல்லாமல் புதிய பெயரில் இந்த ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது.

ஆக்டிவா பிராண்டில் 125சிசி ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் சற்று பிரிமியம் மாடலாக இருக்கும். அதாவது, வெஸ்பா பிராண்டுக்கு போட்டியான மாடலாக இந்த புதிய ஸ்கூட்டரை களமிறக்குகிறது ஹோண்டா. ஹோண்டா ஸ்கூட்டர் என்றவுடன் அதனை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் கொப்பளிப்பது இயற்கைதான். வாருங்களேன் படங்களையும், தகவல்களையும் இந்த செய்தித் தொகுப்பு மூலம் தெரிந்துகொள்ளலாம்.

 01. ஹோண்டா லீட்!

01. ஹோண்டா லீட்!

ஹோண்டா லீட் ஸ்கூட்டர்தான் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. தற்போது இந்த ஸ்கூட்டர் வியட்நாம் மற்றும் ஜப்பான் நாடுகளில் விற்பனையில் இருக்கிறது.

02. இந்தியாவில் வந்துவிட்டது...

02. இந்தியாவில் வந்துவிட்டது...

ஹோண்டா லீட் ஸ்கூட்டர் ஏற்கனவே இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு சோதனைகள் நடந்து வருகின்றன.

03. எஞ்சின்

03. எஞ்சின்

புதிய ஹோண்டா லீட் ஸ்கூட்டரில் இருக்கும் லிக்யூட் கூல்டு 125சிசி எஞ்சின் 11.33 பிஎச்பி சக்தியை அளிக்கும் திறன் கொண்டது. 'ஸ்மார்ட் பவர்' என்ற தொழில்நுட்பம் கொண்ட இந்த எஞ்சின் உள்பக்கத்தில் குறைவான உராய்வு கொண்டதாக இருக்கும் என்பதுடன் எரிபொருள் சிக்கனமும் உடையதாக இருக்கும்.

04. ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டம்

04. ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டம்

சிக்னல் அல்லது குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் ஐட்லிங்கில் வண்டி நிற்கும்போது எஞ்சின் தானாக அணைந்துவிடும் தொழில்நுட்பம் உள்ளது. இதன்மூலம், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். இது ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

06. எதிர்பார்க்கும் விலை?

06. எதிர்பார்க்கும் விலை?

ரூ.70,000 முதல் ரூ.75,000க்கு இடையிலான விலையில் இந்த புதிய ஹோண்டா ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

07. வெயிட் பண்ணலாமா?

07. வெயிட் பண்ணலாமா?

வரும் பண்டிகை காலத்தில் இந்த புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

 

English summary

 Japanese two-wheeler giant has witnessed tremendous success in India with its scooters. Now Honda Motorcycles and Scooters India could launch an all new more premium scooter.
Story first published: Thursday, April 2, 2015, 11:03 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark