புதிய ஹோண்டா லிவோ 110சிசி பைக் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்

By Saravana

இந்தியாவில் புதிய ஹோண்டா லிவோ பைக் டெல்லியில் நடந்த விழாவில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஹோண்டா சிபி ட்விஸ்ட்டருக்கு மாற்றாக இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

110 சிசி செக்மென்ட்டில் அதிக வீல்பேஸ் கொண்ட மாடலாக வந்திருக்கும் புதிய ஹோண்டா லிவோ பைக்கின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

ஹோண்டாவின் பல பைக் மாடல்களின் டிசைன் தாத்பரியங்களை எடுத்து இந்த புதிய பைக் மாடலை உருவாக்கியுள்ளனர். இந்த பைக்கில் ஸ்டீல் டிபியூலர் டைமண்ட் ப்ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கவர்ச்சியான ஹெட்லைட், ஹோண்டா சின்னம் பொருந்திய பெட்ரோல் டேங்க் கவுல்கள், ட்விஸ்ட்டர் பைக் போன்றே சிவப்பு நிற சஸ்பென்ஷன ஸ்பிரிங்குகள், அலாய் வீல்கள், க்ரோம் பூச்சு கொண்ட சைலென்சர் கார்டு போன்றவை முக்கிய டிசைன் அம்சங்கள்.

 எஞ்சின்

எஞ்சின்

புதிய ஹோண்டா லிவோ பைக்கில் இருக்கும் 110சிசி ஏர்கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 8.25 பிஎச்பி பவரையும், 8.63 என்எம் டார்க்கையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

ஹோண்டாவின் புதிய ஈக்கோ டெக் தொழில்நுட்பம் [HET] கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த புதிய பைக் மாடல் லிட்டருக்கு 74 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 டிஸ்க் பிரேக் மாடல்

டிஸ்க் பிரேக் மாடல்

முன்புறத்தில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்ட மாடல் மற்றும் டிரம் பிரேக் சிஸ்டம் கொண்ட இரு மாடல்களிலும் வந்துள்ளது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் டியூவல் ஷாக் அப்சார்பர் சிஸ்டமும் கொண்டிருக்கிறது.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

இந்த பைக் 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸும், 1,285மிமீ வீல் பேஸும் கொண்டது. இதன் கெர்ப் எடை 111 கிலோ, பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 8.5 லிட்டர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

அத்தலெட்டிக் புளூ மெட்டாலிக் என்ற நீல நிறத்திலும், பியர்ல் அமேஸிங் ஒயிட் என்ற வெள்ளை நிறத்திலும், சன்செட் பிரவுன் மெட்டாலிக் என்ற பழுப்பு நிறம் மற்றும் கருப்பு நிறத்தில் என 4 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

விலை விபரம்

விலை விபரம்

டிரம் பிரேக் மாடல் ரூ.52,989 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், டிஸ்க் பிரேக் மாடல் ரூ.55,489 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Japanese motorcycle manufacturer Honda has launched its new premium commuter motorcycle, called the Livo. It will be placed above the Dream series of motorcycle sold by Honda in India.
Story first published: Friday, July 10, 2015, 13:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X