ரூ.999 EMI ஆஃபரில் ஹோண்டா ஷைன் பைக் - விபரம்!

Written By:

பண்டிகை காலத்தையொட்டி, ஹோண்டா ஷைன் பைக்கிற்கு எளிய கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

125சிசி செக்மென்ட்டில் சிறப்பான பைக் மாடலாக வலம் வரும் ஹோண்டா ஷைன் பைக்கை வாங்குவோர்க்கு இது மிகச்சிறப்பானதாக இருக்கும்.

Honda Shine
 

ரூ.5,999 முன்பணம், ரூ.999 மாதத் தவணை கொண்ட இந்த சிறப்பு கடன் திட்டம் ஹோண்டா ஷைன் பைக்கை எளிதாக வாங்க வசதியாக இருக்கும்.

வரும் 29ந் தேதி வரை மட்டுமே இந்த சிறப்பு கடன் திட்டத்தில் ஹோண்டா ஷைன் பைக்கை வாங்க இயலும்.

இந்த சிறப்பு கடன் திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு ஹோண்டா இருசக்கர வாகன டீலர்களை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த 17ந் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மட்டும், ஒரே நாளில் 56,000 இருசக்கர வாகனங்களை ஹோண்டா விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம், பண்டிகை கால விற்பனைக்கு ஓர் நல்ல துவக்கமாகவே ஹோண்டா இருச்சக்கர வாகன நிறுவனம் கருதுகிறது.

English summary
Honda Offers Rs.999 EMI Scheme For Shine Bike.
Story first published: Saturday, September 19, 2015, 15:54 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark