ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டம்?

Written By:

ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்கள், பஜாஜ் நிறுவனத்தின் ஆலையில் உற்பத்தி செய்யபட்டு, ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

இந்திய வாகன சந்தை நன்கு வேகமாக விரிவடைந்து வரும் காரணத்தால், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் சந்தைகளை இங்கு விஸ்தரித்து வருகின்றனர். ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் தடம் பதிக்க விரும்புவது தொடர்பான செய்திகளை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இந்தியாவில் நுழையவுள்ள ஹஸ்க்வர்னா;

இந்தியாவில் நுழையவுள்ள ஹஸ்க்வர்னா;

ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள் என்பது கேடிஎம் ஸ்போட்ர்ஸ் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். இதன் உற்பத்தி நடவடிக்கைகள் 1903-ஆம் ஆண்டில், ஸ்வீடனில் உள்ள ஹஸ்க்வர்னா என்ற இடத்தில் துவங்கியது.

இதன் தற்போதைய தலைமை அலுவலகம் இத்தாலியின் வெர்சேஸ் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

பூனேவில் தயாரிக்கபடும் கேடிஎம்;

பூனேவில் தயாரிக்கபடும் கேடிஎம்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் உற்பத்தி ஆலை, பூனே அருகில் உள்ள சகன் என்ற இடத்தில் உள்ளது. இங்கு தான் கேடிஎம் நிறுவனம் தங்களின் மோட்டார்சைக்கிள்களை தயாரித்து வருகின்றது.

கேடிஎம் நிறுவனம், இந்த சகன் உற்பத்தி ஆலையிலேயே ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிளையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இங்கு தயாரிக்கபட உள்ள மோட்டார்சைக்கிள்கள், பல்வேறு வளர்ந்து வரும் சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யபட உள்ளது.

ஆரம்ப கட்ட திட்டம்;

ஆரம்ப கட்ட திட்டம்;

ஆரம்ப கட்டத்தில், கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா, இந்தியாவில் தயாரிக்கபடும் இஞ்ஜின் மற்றும் உபகரணங்களை உபயோகிக்க திட்டம் கொண்டுள்ளது.

இவற்றின் இறுதி வடிவமான முழு மோட்டார்சைக்கிள்கள், ஆஸ்திரியாவில் உள்ள உற்பத்தி ஆலையில் அசம்பிள் செய்யபட உள்ளது. இப்படி தயாரிக்கபட உள்ள் ஆரம்பகட்ட வாகனங்கள், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கு, 2017-ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து விற்கபட உள்ளது.

வருங்கால திட்டம்;

வருங்கால திட்டம்;

இந்தியாவிலேயே மேற்கொள்ளபட உள்ள ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்களின் முழுமையான உற்பத்தி, 2017-ஆம் முதல் நடைமுறைபடுத்த பட உள்ளது.

தற்போதைய நிலையில், ஹஸ்க்வர்னா நிறுவனம் தங்களின் அனைத்து இரு சக்கர வாகனங்களையும் இந்திய வாகன சந்தைககளில் அறிமுகம் செய்ய உள்ளதாக எதிர்பார்க்கபடுகிறது.

ஆனால், இந்தியாவில் உள்ள பஜாஜ் தயாரிப்பு ஆலையில் எந்த இஞ்ஜின் கொண்ட வாகனம் அல்லது மோட்டார்சைக்கிள் தயாரிக்கபட உள்ளது என்பது குறித்த எந்த தெளிவான தகவல்களும் இல்லை.

யூகங்கள்;

யூகங்கள்;

பூனே அருகே உள்ள சகன் ஆலையில் தயாரிக்கபடும் கேடிம் இஞ்ஜின்களே இந்த ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்களுக்கு உபயோகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

ஆரம்ப கட்டத்தில், 125 சிசி மற்றும் 375 சிசி சிங்கிள் சிலிண்டர் இஞ்ஜின்கள் உபயோகிக்கபட வாய்ப்புகள் உள்ளது.

விலை நிர்ணயத்தில் அனுகூலம்;

விலை நிர்ணயத்தில் அனுகூலம்;

தற்போதைய நிலையில், குறைந்த செலவுகளில் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.

இதனால், பஜாஜ் உற்பத்தி ஆலையில் தயாரிக்கபடும் மோட்டார்சைக்கிள்கள் குறைந்த விலைகளில் விற்கபட வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

2 சக்கர வாகன செய்திகள்

4 சக்கர வாகன செய்திகள்

English summary
Husqvarna Motorcycles shall be manufactured and exported from the Bajaj's manufacturing Plant in Chakan, Pune. Husqvarna Motorcycles is brand owned by KTM-Sportmotorcycle and they are planning to enter India. This brand commenced their two-wheeler production in 1903 in Huskvarna, Sweden.
Story first published: Wednesday, December 23, 2015, 17:42 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark