கோவாவில், பைக் பிரியர்களை கவர்ந்து வரும் அப்ரிலியா ஆர்எஸ்வி4 சூப்பர் பைக்!

Posted By:

கோவாவில் நடந்து வரும் இந்திய பைக் வீக் திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அப்ரிலியா ஆர்எஸ்வி4 பைக் பார்வையாளர்களையும், பைக் பிரியர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

பிற பிராண்ட சூப்பர் பைக்குகளை வைத்திருப்போரையும் ஏங்க வைக்கும் டிசைன் அம்சங்களுடன் காட்சி தந்து வரும் இந்த சூப்பர் பைக்கின் பிரத்யேக படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

சூப்பர் பைக்குகளுக்கு உண்டான சாமுத்ரிகா லட்சணத்துடன் பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது இந்த அப்ரிலியா பிராண்டிலான சூப்பர் பைக்.

 எஞ்சின்

எஞ்சின்

அப்ரிலியா ஆர்எஸ்வி - 4 பைக்கில் 999.6சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

பவர்

பவர்

இந்த பைக்கின் எஞ்சின் அதிகபட்சமாக 12,500 ஆர்பிஎம்மில் 180 பிஎச்பி பவரையும், 10000 ஆர்பிஎம்மில் 115 என்எம் டார்க்கையும் அளிக்கும். 179 கிலோ எடை கொண்டது.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

அப்ரிலியா ஆர்எஸ்வி 4 மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. 0- 100 கிமீ வேகத்தை 3.5 வினாடிகளில் கடந்துவிடும்.

 பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

முன்புறத்தில் 320மிமீ டியூவல் டிஸ்க் பிரேக்குகளை கொண்டுள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாகவும் கிடைக்கிறது.

விலை

விலை

ரூ.17.5 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. டிராக்ஷன் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் இதில் உண்டு.

 
English summary
Italian auto major Piaggio has displayed itd Aprilia RSV4 superbike at ongoing 2015 India Bike Week in Goa. Take a look.
Story first published: Saturday, February 21, 2015, 11:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark