இந்தியன் நிறுவனத்தின் புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

By Saravana

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்து வரும் மோட்டார் ஷோவில், புதிய க்ரூஸர் ரக பைக் மாடலை இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

சீஃப் டார்க் ஹார்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய மோட்டார்சைக்கிள் பெயருக்கு ஏற்றாற்போல் அசத்தலாக இருக்கிறது. இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் மாடலான இந்த புதிய இந்தியன் பைக் மாடல் குறித்த கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.


மேட் ஃபினிஷ்

மேட் ஃபினிஷ்

இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 6வது மாடலாக இந்த புதிய பைக் வந்திருக்கிறது. இந்த பைக் முழுவதுமாக கருப்பு நிறத்தில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரே வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய மோட்டார்சைக்கிளில் 138.9 என்எம் டார்க்கை வழங்கும் 1,811சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இதர இந்தியன் மோட்டார்சைக்கிள் மாடல்கள் போன்றே இந்த புதிய மாடலிலும் ஏராளமான பாதுகாப்பு மற்றும் சிறப்பு வசதிகள் இருக்கின்றன. ஏபிஎஸ், க்ரூஸ் கன்ட்ரோல், கீலெஸ் இக்னிஷன், பிரேக் காலிபர் கவர்கள், லக்கேஜ் ராக், டியூவல் எக்சாஸ்ட் என ஏராளமான சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன.

விலை

விலை

அமெரிக்காவில் 16,999 டாலர் விலையில், அதாவது இந்திய மதிப்பில் ரூ.10.58 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்திய பிரவேசம்

இந்திய பிரவேசம்

இந்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் இந்த புதிய பைக் மாடலை இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் என்பதால், ரூ.20 லட்சம் விலை கொண்டதாக இருக்கும்.

Most Read Articles
English summary

 Indian Motorcycle has revealed its new cruiser at the 2015 Chicago Motor Show. The American based manufacturer has christened this motorcycle as the ‘Chief Dark Horse'. The two-wheeler manufacturer will bring this cruiser down to India as well within 2015.
Story first published: Tuesday, February 17, 2015, 10:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X