இனி டெல்லி போக வேண்டாம்... பெங்களூர் வந்துவிட்டது இந்தியன் மோட்டார்சைக்கிள்கள்... !!

Written By:

இந்தியாவில் 2வது ஷோரூமை பெங்களூரில் திறந்திருக்கிறது இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம். இந்த ஷோரூம் திறப்பு விழாவுடன் சேர்த்து, புதிதாக 2 மோட்டார்சைக்கிள் மாடல்களையும் இந்தியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

தென் இந்தியாவில் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் ஷோரூம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அத்துடன் புதிதாக வந்திருக்கும் 2 இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் பற்றிய விபரங்களையும் சற்று விலாவரியாக ஸ்லைடரில் காணலாம்.

மாடல்கள் விபரம்

மாடல்கள் விபரம்

இந்தியாவில், இந்தியன் ஸ்கவுட், கிளாசிக், விண்டேஜ் மற்றும் சீஃப்டெயின் மாடல்கள் ஆகிய மாடல்கள் ஏற்கனவே விற்பனையில் உள்ளன. இவை குர்கானில் உள்ள ஷோரூம் வழியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பெங்களூர் ஷோரூம் திறப்பு விழாவில், இந்தியன் டார்க் ஹார்ஸ் மற்றும் ரோட்மாஸ்டர் ஆகிய இரு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

 இந்தியன் டார்க் ஹார்ஸ்

இந்தியன் டார்க் ஹார்ஸ்

இது ஒரு க்ரூஸர் வகை மாடல். இந்தியன் டார்க் ஹார்ஸ் மாடலில் 100 எச்பி பவரையும், 138.9 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும் 1,811சிசி தண்டர்ஸ்டோக் 111 வி- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

 வசதிகள்

வசதிகள்

இந்த பைக் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கீலெஸ் ஸ்டார்ட், க்ரூஸ் கன்ட்ரோல், வினைல் இருக்கை போன்றவற்றுடன் வந்துள்ளது.20.8 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

ரோட்மாஸ்டர்

ரோட்மாஸ்டர்

அடுத்தாக வந்திருக்கும் மற்றுமொரு புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள் ரோட்மாஸ்டர். டார்க்ஹார்ஸில் இருக்கும் அதே எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. இது ஓர் சிறப்பான டூரிங் வகை மாடலாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

வசதிகள்

வசதிகள்

ஓர் சிறப்பான க்ரூஸர் வகை மாடலான ரோட்மாஸ்டரில் கீலெஸ் ஸ்டார்ட், க்ரூஸ் கன்ட்ரோல், விண்ட்ஷீல்டு, டயர் பிரஷர் மானிட்டர், ரிமோட் லாக்கிங் டிரங்க், சாடில் பேக்ஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

ரோட்மாஸ்டர் மோட்டார்சைக்கிள் தண்டர்பிளாக், இந்தியன் ரெட் மற்றும் இந்தியன் ரெட் ஐவரி க்ரீம் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். டார்க் ஹார்ஸ் மோட்டார்சைக்கிள் கறுப்பு வண்ணத்தில் மட்டும் கிடைக்கும்.

விலை

விலை

புதிய இந்தியன் டார்க்ஹார்ஸ் மோட்டார்சைக்கிள் ரூ.21.99 லட்சத்திலும், ரோட்மாஸ்டர் மோட்டார்சைக்கிள் ரூ.34.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாடல்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளன.

ஷோரூம் முகவரி

ஷோரூம் முகவரி

பெங்களூர் ஷோரூம் முகவரி:

Exquisite Moto LLP,

Prestige Nugget,

# 126, Infantry road,

Bangalore - 560001.

 
English summary
Indian Motorcycles have been launched in Bangalore today. Indian motorcycles are offered in India as Completely Built Units (CBU). They are planning on offering their entire range in the country. Along with the new showroom, the motorcycle maker launched the Indian Dark Horse motorcycle and the Roadmaster, the company's flagship motorcycle.
Story first published: Thursday, May 7, 2015, 16:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark