கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்- 10ஆர் சூப்பர் பைக் அறிமுகம் - விபரம்

Posted By:

ஸ்பெயினில் நடந்த நிகழ்ச்சியில் கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-10 ஆர் ஆர் சூப்பர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. பிரபல பைர் பந்தய வீரர்கள் ஜானதன் ரியா மற்றும் டாம் ஸ்கெய்ஸ் வழங்கிய வடிவமைப்பு ஆலோசனைகளை கொண்டு இந்த சூப்பர்பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான உலக சூப்பர் பைக் சாம்பியன்ஷிப் போட்டியில், கவாஸாகி நிறுவனம் வென்றுள்ளது. உலக சூப்பர் பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் பயன்படுத்தப்படும் பந்தய பைக்கின் தோற்றத்தை போலவே, இந்த நின்ஜா இசட்எக்ஸ்-10 ஆர் ஆர் சூப்பர் பைக் காட்சி அளிக்கிறது.

டிசைன்

டிசைன்

கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-10 ஆர் பைக்கில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கௌளிங் எனப்படும் உலோக மூடிகள் முன்பக்கமும், பக்கவாட்டிலும் பெரியதாக உள்ளது. வால் பகுதியின் கௌளிங் சற்று அகன்றபடி டிசைன் செய்யப்பட்டுள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

2016 கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-10 ஆர் ஆர் சூப்பர் பைக்கானது, 4 சிலிண்டர்கள் கொண்டுள்ள 998 சிசி இஞ்ஜினுடன் களமிறங்கியுள்ளது. இதன் லிக்விட் கூல்ட் இஞ்ஜின் 207.04 ஹார்ஸ்பவரையும், 113.5 என் எம் டார்க்கையும் வெளியிடும் திறன் கொண்டது. இந்த பைக்கில் 6 வகையான வேக பறிமாற்றங்களுக்கு எளிதாக மாறிக்கொள்ள கூடிய வகையிலான கியர்பாக்ஸுடன் வருகிறது.

மைலேஜ்

மைலேஜ்

இந்த சூப்பர் பைக் ஒரு லிட்டருக்கு சராசரியாக 16.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

டிரைவிங் ஆப்ஷன்

டிரைவிங் ஆப்ஷன்

நின்ஜா இசட்எக்ஸ்-10 ஆர் ஆர் பைக்கில் உள்ள பல்வேறு பவர் மோட்கள் மூலம், பலதரப்பட்ட சாலை சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றி மாற்றி எளிதாக இயக்க முடியும். இந்த பைக்கில் உள்ள எகனாமிக்கல் ரைடிங் இண்டிகேடர் மூலம், இதை திறன்பட இயக்கி, எரிபொருளையும் கூட மிச்சப்படுத்தலாம்.

பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

இதன் முன் சக்கரத்தில், 330 மில்லிமீட்டர் அளவு கொண்ட புதிய இரட்டை பிரெம்போ எம் 50 மோனோப்ளாக் கேலிபர்கள் பொருத்தப்பட்டுள்ளது. பேலன்ஸ் - ஃப்ரீ முன் ஃபோர்க்குகள் ஷோவா-வால் உருவாக்கப்பட்டவை. இந்த சிறப்புமிக்க முன்புற ஃபோர்க்குகளை ஷோவா நிறுவனம் தயாரித்துள்ளது. இவை உலக சூப்பர் பைக் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இயக்கி பரிசோதிக்கப்பட்டவையாகும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

உறுதிமிக்க அலுமினியத்தால் ஆன இதன் சேஸி, ட்வின் ஸ்பார் ஃபிரேம்களை கொண்டுள்ளது. அதிக நிலைத்தன்மை தருவதற்காக, இதன் பெரும்பான்மையான எடை முன்புறத்தை மையப்படுத்தி இருக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பைக் இயக்கத்தை கண்காணிக்கும் வசதி, எலக்ட்ரானிக் ஸ்டீயரிங் டேம்பர், கார்னரிங் மேனேஜ்மண்ட் ஃபங்க்‌ஷன், கவாஸாகி இஞ்ஜின் பிரேக் கண்ட்ரோல், உள்ளிட்ட பல உயர் தர வசதிகளுடன் இந்த நின்ஜா இசட்-10 ஆர் ஆர் பைக் உங்களுக்கு கிடைக்க உள்ளது.

 
English summary
Kawasaki has lifted the covers off their 2016 ZX-10R superbike at a special event organised in Barcelona, Spain.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark