கவாஸாகி நிறுவனத்தின் கேஎல்எக்ஸ் 110 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்

Written By:

கவாஸாகி நிறுவனம், தங்களின் கேஎல்எக்ஸ் 110 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட ஆரம்ப ரக மோட்டார்சைக்கிளான இதனை சாதாராண சாலைகளில் ஓட்ட முடியாது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

கவாஸாகி கேஎல்எக்ஸ் 110 பைக்கில், 112 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட், கார்புரேட்டட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் 7.24 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 8 என்எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், ஸ்டால்-ஃப்ரீ ரைடிங் எனப்படும் நிற்காமல் இயங்கி கொண்டிருக்க கூடிய வகையில், ஆட்டோ கிளட்ச் சிஸ்டம் வசதியுடன் கூடிய 4-ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டுள்ளது.

பிரேக் அமைப்பு;

பிரேக் அமைப்பு;

கவாஸாகி கேஎல்எக்ஸ் 110 பைக்கின் முன் சக்கரம் 90 மில்லிமீட்டர் டிரம் பிரேக்குகளும், இதன் பின் சக்கரம் 110 மில்லிமீட்டர் டிரம் பிரேக்குகளும் கொண்டுள்ளது.

கவாஸாகி கேஎல்எக்ஸ் 110 மோட்டார்சைக்கிள், பேக்போன் (முதுகு எலும்பு) போன்ற, ஸ்டீல் வகையிலான ஃபிரேம் கொண்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

இதன் முன் சக்கரத்தில், 30 மில்லிமீட்டர் டெலஸ்கோபிக் ஃபோர்க் செட்டப் கொண்டுள்ளது. இதன் ரியர் சக்கரம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது.

எடை;

எடை;

கவாஸாகி கேஎல்எக்ஸ் 110 பைக் வெரும் 76 கிலோகிராம்கள் எடை மட்டுமே கொண்டுள்ளது. இதனால், இதை இளம் ரைடர்களும் மிக எளிதாக இயக்க முடியும்.

எரிபொருள் திறன்;

எரிபொருள் திறன்;

கவாஸாகி கேஎல்எக்ஸ் 110 பைக், 3.6 லிட்டரிகள் என்ற அளவிலான எரிபொருள் தேக்கும் திறன் கொண்டுள்ளது.

இதன் சீட் உயரம் 680 மில்லிமீட்டர் உயரத்திலும், இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 215 மில்லிமீட்டர் என்ற அளவிலும் உள்ளது.

சாலைகளில் இயக்க அனுமதி இல்லை;

சாலைகளில் இயக்க அனுமதி இல்லை;

இந்த கவாஸாகி கேஎல்எக்ஸ் 110 பைக், ஸ்ட்ரீட் லீகல் பைக் அல்ல என்பது குறிப்பிடதக்கது. எனில், இதை சாலைகளில் இயக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடதக்கது.

ஆரம்பகட்ட பைக் பழகுனர்களுக்கு இது சிறந்த ஆஃப்-ரோடு மோட்டார்சைக்கிளாக விளங்கும்.

விலை;

விலை;

கவாஸாகி கேஎல்எக்ஸ் 110 பைக், இந்தியாவில் 2.8 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் பூனே) விலையில் உள்ளது.

கவாஸாகி கேஎல்எக்ஸ் 110 பைக் சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதுமாக தயாரித்து முடிக்கபட்ட மோட்டார்சைக்கிளாக இந்தியாவில் அறிமுகம் செய்யபடுவதால் தான், இந்த விலையில் விற்கப்படுவதாக தெரிவிக்கபடுகிறது.

மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு சிறந்தது;

மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு சிறந்தது;

ஆஃப் ரோட் மோட்டார்சைக்கிள் மூலம் தங்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை துவங்க விரும்புபவர்களுக்கு, கவாஸாகி கேஎல்எக்ஸ் 110 பைக் மூலம் ஒரு சிறந்த வாய்ப்பை கவாஸாகி நிறுவனம் வழங்குகின்றது என்றே கூறலாம்.

English summary
Kawasaki KLX 110 motorcycle of the Kawasaki was launched in India. Kawasaki KLX 110 by Kawasaki is a goof off-road motorcycle for the beginners. Kawasaki KLX 110 is not a street legal motorcycle and it can be used only in closed circuits.
Story first published: Sunday, November 22, 2015, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark