ஏப்ரலில் இந்தியா வரும் புதிய நின்ஜா எச்2 'ஹைப்பர்' பைக் பற்றி சில துளிகள்!

Written By:

கடந்த ஆண்டு கவாஸாகி நிறுவனம் அறிமுகம் செய்த நின்ஜா எச்2 ஹைப்பர் பைக்கும், அதன் ரேஸ் மாடலான எச்2ஆர் பைக்கும் சர்வதேச அளவில் பைக் மற்றும் ரேஸ் பிரியர்களின் கவனத்தை ஈர்த்தன.

இந்த நிலையில், நின்ஜா எச்2 ஹைப்பர் பைக்கை வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது கவாஸாகி நிறுவனம். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த ஹைப்பர் பைக்கில் என்னென்ன முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை பகிர்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

 01. லிமிடேட் எடிசன்

01. லிமிடேட் எடிசன்

இந்தியாவில் 5 நின்ஜா எச்2 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. அனைத்து பைக்குகளுக்கும் ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், எப்போது இந்த பைக் டெலிவிரி கொடுக்கப்படும் என்ற உத்தரவாதம் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு கவாஸாகி கொடுக்கவில்லை.

 02. எஞ்சின்

02. எஞ்சின்

அதிசக்திவாய்ந்த இந்த பைக்கின் 4 சிலிண்டர்கள் கொண்ட 998சிசி சூப்பர்சார்ஜ்டு எஞ்சின் அதிகபட்சமாக 200 எச்பி பவரையும், 156 என்எம் டார்க்கையும் வழங்கும். உருக்கு உலோகத்திலான பிஸ்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவை அதிக வெப்பத்தை தாங்கும் வல்லமை கொண்டதுடன், உராய்வும் குறைவாக இருக்கும்.

03. விசேஷ கியர்பாக்ஸ்

03. விசேஷ கியர்பாக்ஸ்

மோட்டோ ஜீபி ரேஸ் பைக்குகளில் பயன்படுத்தப்படும் விசேஷ டாக் ரிங் தொழில்நுட்பம் கொண்ட 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. அதிவேக இயக்கத்தில் கியர்களை மாற்றும் வசதியை அளிக்கும் இந்த நவீன கியர்பாக்ஸ் மூலம் மிகச்சிறப்பான செயல்திறனை எச்2 பைக் வெளிப்படுத்தும்.

04. பாதுகாப்பு வசதிகள்

04. பாதுகாப்பு வசதிகள்

கவாஸாகியின் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், லான்ச் கன்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஓலின்ஸ் எலக்ட்ரானிக் ஸ்டீயரிங் டேம்பர் என பல நவீன பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

05. இறக்குமதி

05. இறக்குமதி

ஜப்பானின் அகாஷியிலுள்ள கவாஸாகி ஆலையில் இந்த புதிய பைக் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

06. ஆன்ரோடு விலை

06. ஆன்ரோடு விலை

ரூ.32.80 லட்சம் புனே ஆன்ரோடு விலையில் இந்த புதிய பைக் விற்பனை செய்யப்படும்.

 
English summary
Japanese two-wheeler manufacturer, Kawasaki recently launched its hyperbike the Ninja H2 and H2R. Now they will be officially launching the Ninja H2 in India during the 1st week of April, 2015.
Story first published: Saturday, March 28, 2015, 16:32 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark