கவாஸாகி வெர்சிஸ் 650 அட்வென்சர் பைக் டிச.24ல் விற்பனைக்கு அறிமுகம்?

Written By:

கவாஸாகி வெர்சிஸ் 650 அட்வென்சர் மோட்டார்சைக்கிள், வரும் டிசம்பர் 24-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் வாகன சந்தைகள் வேகமாக வளர்ந்து வருவதையடுத்து, பல்வேறு வகையான மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யபட்டு வருகின்றது.

விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யபட உள்ள, கவாஸாகி வெர்சிஸ் 650 அட்வென்சர் மோட்டார்சைக்கிள் குறித்த தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

மும்பையில் அறிமுகம்;

மும்பையில் அறிமுகம்;

கவாஸாகி வெர்சிஸ் 650 அட்வென்சர் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் நிகழ்ச்சி டிசம்பர் 24, 2015 அன்று நடை பெற உள்ளது.

மும்பையில் நடத்தபட உள்ள அறிமுக நிகழ்ச்சியின் போது, கவாஸாகி நிறுவனம் சார்பாக இந்தியாவில் விற்கபடும் அனைத்து மோட்டார்சைக்கிள்களும் காட்சிபடுத்தபட உள்ளது.

இது தான், கவாஸாகி நிறுவனம் சார்பாக, 2015-ல் அறிமுகம் செய்யபடும் கடைசி மோட்டார்சைக்கிளாக இருக்கும்.

வகைபடுத்தல்;

வகைபடுத்தல்;

கவாஸாகியின் வெர்சிஸ் 650 அட்வென்சர் மோட்டார்சைக்கிள், அறிமுக-நிலை அட்வென்சர் பைக்காக விளங்க உள்ளது.

இது கவாஸாகி நிஞ்ஜா 650 மேலாகவும், கவாஸாகி இசட்800 மோட்டார்சைக்கிளுக்கு கீழாவும் வகைபடுத்தபடுகிறது.

நிஞ்ஜா 650, வெர்சிஸ் 650 பைக்குகளின் ஒற்றுமை;

நிஞ்ஜா 650, வெர்சிஸ் 650 பைக்குகளின் ஒற்றுமை;

கவாஸாகி நிஞ்ஜா 650 மோட்டார்சைக்கிளுக்கும், வெர்சிஸ் 650 மோட்டார்சைக்கிளுக்கும் இடையில் பல்வேறு உதிரி பாகங்கள் பகிரபடுகிறது.

இதற்கு முக்கிய காரணம், இந்த இரு மோட்டார்சைக்கிளும், இரு வேறு உருவங்கள் கொண்ட ஒரே பைக்காக விளங்கி, வேறுபட்ட வாடிக்கையாளர்களை கவர உள்ளது.

ஷோபிக்காத வெர்சிஸ் 1000;

ஷோபிக்காத வெர்சிஸ் 1000;

தற்போதைய நிலையில், கவாஸாகி வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிள் தான் இந்திய சந்தைகளில் வழங்கபட்டு வருகின்றது.

கவாஸாகி வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிள், டிரயம்ஃப் டைகர் ரேஞ்ஜ் மோட்டார்சைக்கிள்களிடம் இருந்து கடும் போட்டியை எதிர் நோக்க வேண்டியதாக இருந்தது.

ஆனால், 1 லிட்டர் வகையிலான கவாஸாகி வெர்சிஸ் அட்வென்சர் மோட்டார்சைக்கிள், வாடிக்கையாளர்களின் மனதை கவருவதில் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.

வெர்சிஸ் 650 இஞ்ஜின்;

வெர்சிஸ் 650 இஞ்ஜின்;

வெர்சிஸ் 650 மோட்டார்சைக்கிள், 649 சிசி, பேரலல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின் 69 பிஹெச்பி-யையும், 64 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. கவாஸாகியின் வெர்சிஸ் 650 அட்வென்சர் பைக்கின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பார்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

விற்கபட உள்ள விதம்;

விற்கபட உள்ள விதம்;

கவாஸாகி நிறுவனம், இந்திய வாடிக்கையாளர்களுக்கு, இந்த வெர்சிஸ் 650 அட்வென்சர் மோட்டார்சைக்கிளை சிகேடி எனப்படும் கம்ப்ளீட்லி நாக்ட் டடௌன் யூனிட் வகையில் வழங்க உள்ளது.

ஏபிஎஸ் வசதி;

ஏபிஎஸ் வசதி;

கவாஸாகி நிறுவனம், வெர்சிஸ் 650 அட்வென்சர் மோட்டார்சைக்கிளுடன் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேகிங் சிஸ்டத்தை ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்க உள்ளது.

விலை;

விலை;

வெர்சிஸ் 650 அட்வென்சர் மோட்டார்சைக்கிள் விற்கபடக்கூடிய விலை குறித்த எந்த விதமான தெளிவான தகவல்களும் வெளியிடபடவில்லை.

எனினும், இந்த கவாஸாகி வெர்சிஸ் 650 அட்வென்சர் மோட்டார்சைக்கிள் விலை, அட்வென்சர் மோட்டார்சைக்கிள்களில் விலையில் விற்கபட உள்ளதாக தெரிகிறது.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Kawasaki Versys 650 Adventure Motorcycle India Launch is very much expected to be held on December 24, 2015. One of the highly anticipated Versys 650 motorcycle launch is to held in Mumbai. This would be the last product for 2015 from Kawasaki. The Versys 650 would be the entry-level adventure bike from Kawasaki.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark