கவாஸாகி இசட்800 பைக்கின் விலை அதிரடி குறைப்பு!

Written By:

இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கவாஸாகி இசட்800 பைக்கின் விலை ரூ.50,000 குறைக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்திலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்ப்டடு வருகிறது. இந்த நிலையில், தாய்லாந்தில் இந்த பைக்கிற்கு உற்பத்தி வரிச்சலுகை கிடைத்துள்ளது.

Kawasaki Z800
 

இதனை வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில், வரிச்சலுகையை விலை குறைப்பாக அறிவித்துள்ளது கவாஸாகி. வரும் மார்ச் மாதம் வரை மட்டுமே இந்த சலுகை விலை அமலில் இருக்கும்.

ரூ.7.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்ட இந்த பைக் தற்போது ரூ.7.35 லட்சத்தில் விற்பனைக்கு கிடைக்கும். நேர் போட்டியாளரான டிரையம்ஃப் ஸ்ட்ரீட் டிரிப்பிள் பைக் ரூ.7.65 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், அதைவிட ரூ.30,000 வரை குறைவான விலையில் இந்த பைக் தற்போது கிடைக்கிறது.

English summary
Japanese premium bike manufacturer Kawasaki has redused Z800 price by Rs 50000 in India.
Please Wait while comments are loading...

Latest Photos