கேடிஎம் பைக்குகளின் விலை உயர்வு - முழு விபரம்

By Saravana

வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த உற்பத்தி வரிச்சலுகையை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. இதனையடுத்து, கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில், தற்போது ஆஸ்ரியாவை சேர்ந்த கேடிஎம் பைக் தயாரிப்பு நிறுவனமும் விலையை உயர்த்தியுள்ளது. மாடல்களுக்கு தகுந்தவாறு ரூ.9,000 வரை பைக்குகளின் விலையை கேடிஎம் உயர்த்தியிருக்கிறது.


கேடிஎம் பைக் விலை உயர்வு விபரம்

ஒவ்வொரு மாடலுக்கும் விலை எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது, விலை உயர்வுக்கு பின்னர் கேடிஎம் பைக்குகளின் டெல்லி எக்ஸ்ஷோரூம் மற்றும் ஆன்ரோடு விலை விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் வழங்கியுள்ளோம்.

கேடிஎம் டியூக் 200

கேடிஎம் டியூக் 200

கேடிஎம் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடலான கேடிஎம் டியூக் 200 பைக்கின் விலை ரூ.7,190 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கேடிஎம் டியூக் பைக் ரூ.1.37,787 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். மேலும், அனைத்து வரிகள் மற்றும் இதர கட்டணங்களையும் சேர்த்து ரூ.1.58 லட்சம் ஆன்ரோடு விலையில் டியூக் 200 கிடைக்கும்.

கேடிஎம் டியூக் 390

கேடிஎம் டியூக் 390

கேடிஎம் டியூக் பைக்கின் விலை ரூ.8,987 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ரூ.1,89,942 எக்ஸ்ஷோரூம் விலையாக அதிகரித்துள்ளது. இந்த பைக் தற்போது 2.17 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கும்.

கேடிஎம் ஆர்சி200

கேடிஎம் ஆர்சி200

கேடிஎம் ஆர்சி200 ஃபுல்பேரிங் பைக் மாடலின் விலை ரூ.6,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.66,249 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ரூ.1.82 லட்சம் ஆன்ரோடு விலையில் இந்த பைக் கிடைக்கும்.

கேடிஎம் ஆர்சி390

கேடிஎம் ஆர்சி390

கேடிஎம் ஆர்சி390 ஸ்போர்ட்ஸ் பைக்கின் விலை ரூ.8,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.2,12,861 எக்ஸ்ஷோரூம் விலையிலும், ரூ.2.43 லட்சம் டெ்லி ஆன்ரோடு விலையிலும் கிடைக்கும்.


Most Read Articles
English summary
Austrian sports bike maker KTM has increased prices of all its motorcycles sold in India following the recent cancellation of the excise duty concession. 
Story first published: Wednesday, January 14, 2015, 16:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X