மஹிந்திரா கஸ்ட்டோ ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட் அறிமுகம்

Posted By:

மஹிந்திரா கஸ்ட்டோ ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா கஸ்ட்டோ Hx என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய வேரியண்ட் கஸ்ட்டோ Dx வேரியண்ட்டுக்கும், கஸ்ட்டோ Vx டாப் வேரியண்ட்டுக்கும் இடையில் நடுத்தர மாடலாக விற்பனை செய்யப்படும். டாப் வேரியண்ட்டில் கிடைக்கும் ஃப்ளிப் கீ மற்றும் ஃபைன் மீ லைட்ஸ் இந்த வேரியண்டில் கிடைக்காது. 

Mahindra Gusto Scooter
 

மஹிந்திரா கஸ்ட்டோ ஸ்கூட்டரில் 109.6சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க்கையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

மஹிந்திரா கஸ்ட்டோ ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை மாடல் ரூ.44,800 எக்ஸ்ஷோரூம் விலையிலும், உயர்நிலை மாடல் ரூ.48,800 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த புதிய நடுத்தர நிலை மாடல் ரூ.46,800 விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

English summary
The Indian manufacturer Mahindra two wheelers is now adding a third trim level in Gusto scooter that will sit between these two models. The Gusto by Mahindra is their global offering and has been built by Indian engineers and designers.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark