பெங்களூரில் நாளை விற்பனைக்கு அறிமுகமாகும் மஹிந்திரா கஸ்டோ!

Written By:

மஹிந்திராவின் புதிய கஸ்டோ ஸ்கூட்டர் நாளை தென் இந்திய மார்க்கெட்டிற்காக பெங்களூரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், புதிய மஹிந்திரா கஸ்டோ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

Mahindra Gusto
 

டிஎக்ஸ் பேஸ் மாடல் ரூ.43,000 விலையிலும், விஎக்ஸ் டாப் மாடல் ரூ.47,000 விலையிலும் வந்தது. இந்த நிலையில், தென் இந்திய மார்க்கெட்டில் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சி பெங்களூரில் நாளை நடைபெற உள்ளது.

இந்த புதிய ஸ்கூட்டர் மாடலில் 8 பிஎச்பி பவரையும், 8.5 என்எம் டார்க்கையும் வழங்கும் 109.6சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சம், இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைக்க முடியும் என்பதாகும். கூடுதல் விபரங்களை நாளை டிரைவ்ஸ்பார்க் தளத்தில் படிக்கலாம்.

புதிய மஹிந்திரா கஸ்டோ ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

English summary
Mahindra Two-Wheelers is all set to launch its latest product, the Mahindra Gusto in Bangalore on the 7th of January.
Story first published: Tuesday, January 6, 2015, 12:54 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos