தீபாவளி ஸ்பெஷல்: மஹிந்திரா கஸ்ட்டோ ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

Written By:

தீபாவளி பண்டிகையை ஒட்டி, மஹிந்திரா ஸ்பெஷல் எடிஷன் கஸ்ட்டோ ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பண்டிகைகாலங்களை ஒட்டி பல்வேறு நிறுவனங்கள் கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. மஹிந்திரா டூ வீலர்ஸும் தங்கள் சார்பாக ஸ்பெஷல் எடிஷன் கஸ்ட்டோ ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிஷன் கஸ்ட்டோ மஹிந்திராவின் விஎக்ஸ் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. விஎக்ஸ் வேரியண்ட் அனைத்து வகையான உயர்தர அம்சங்களுடன் வருகிறது. இந்த பண்டிகை காலத்தை ஒட்டி, மஹிந்திரா இலவச இன்ஷ்யூரன்ஸ் வசதியை வழங்குகிறது.

Mahindra Launches Special Edition Gusto For Diwali

ஸ்பெஷல் எடிஷன் கஸ்ட்டோ மஹிந்திராவின் 109.6 சிசி சிங்கிள் சிலிண்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 7.9 பிஹெச்பி மற்றும் உச்சபட்சமாக, 9 என்எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. சிவிடி எனப்படும் கண்டினியுவஸ் வேரியபல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ள இந்த இஞ்ஜின், லிட்டருக்கு 63.7 கிலோமீட்டர் மைலேஜ் வழங்க்குகிறது.

ஹைட்-அட்ஜஸ்ட் சீட், ரிமோட் ஃப்ளிப்-கீ, ஃபைண்ட்-மீ லேம்ப்கள், கைட்-லேம்ப், ட்யூப்லெஸ் டயர்கள், ஏர்-ஸ்ப்ரிங்குகள் கொண்ட டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன், ஃப்ரண்ட் கிக், க்விக் ஸ்டோரேஜ் ஆக்ஸஸ் உள்ளிட்ட பல பிரத்யேக அம்சங்கள் இந்த ஸ்பெஷல் எடிஷன் கஸ்ட்டோ ஸ்கூட்டரில் உள்ளது.

Mahindra Launches the Special Edition Gusto For Diwali

மஹிந்திரா ஸ்பெஷல் எடிஷன் கஸ்ட்டோ ஸ்கூட்டகள், ஐஸ் கூல் ரெட் மற்றும் சில்வர் மெஜெந்தா உள்ளிட்ட இரு வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிஷன் கஸ்ட்டோ 51,560 ரூபாய் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கின்றது.

English summary
Mahindra Launches Special Edition Gusto For Diwali. This Special edition of Mahindra Gusto Scooter is launched in two special edition colours, Ice Cool Red and Silver Magenta.
Story first published: Wednesday, October 21, 2015, 16:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark