அக்.16ல் விற்பனைக்கு வருகிறது புதிய மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக்!

Written By:

அதோ, இதோ என்று போக்குகாட்டி வந்த புதிய மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக் அடுத்த மாதம் 16ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகியுள்ளது.

பல ஆண்டுகளாக தீவிர சோதனையில் இருந்து வந்த இந்த புதிய ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் பல வெளிநாட்டு ஜாம்பவான் மாடல்களுடன் போட்டி போட இருக்கிறது. போட்டியாளர்களைவிட குறைவான விலையில் எதிர்பார்க்கப்படும் மஹிந்திரா மோஜோவின் சில சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

முன்பதிவு

முன்பதிவு

நாடு முழுவதும் பல மஹிந்திரா இருசக்கர வாகனப் பிரிவு டீலர்களில் புதிய மோஜோ பைக்கிற்கு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இப்போது முன்பதிவு செய்பவர்களுக்கு சில ஆச்சரிய பரிசுகளும் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Photo Credit: Sarath Shenoy

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பெரிய பெட்ரோல் டேங்க், டியூவல் டிஸ்க் பிரேக் சிஸ்டம், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர், பகல் நேர விளக்குகள் போன்றவற்றுடன் பல நவீன தொழில்நுட்ப அம்சங்களை சுமந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய 300சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎஸ் பவரை அளிக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

புதிய மஹிந்திரா மோஜோ பைக்கில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது. அத்துடன், லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.2 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்த புதிய மஹிந்திரா மோஜோ பைக் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Mahindra Two-wheelers could have zeroed in on the launch date of the Mojo motorcycle, that has been speculated and guessed for a long time now! The Mahindra Mojo will launch on the 16th of October (this year, yes!).
Story first published: Tuesday, September 22, 2015, 14:22 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark