எதிர்பாராத விலையில் புதிய மஹிந்திரா மோஜோ விற்பனைக்கு வந்தது - முழு விபரம்!

Written By:

எதிர்பாராத விலையில் புதிய மஹிந்திரோ மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

வரும் தீபாவளி பண்டிகைக்கு பின்னர், விலை உயர்த்தப்படும் வாய்ப்பிருப்பதால், வாங்க விரும்புவோர் உடனடியாக முன்பதிவு செய்து கொள்வது நல்லது. மிகச்சிறப்பான சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் டூரர் மாடலாக, சரியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்

தோற்றம்

இரட்டை ஹெட்லைட் அமைப்பு, எல்இடி பைலட் விளக்குகள், பிரம்மாண்டமான பெட்ரோல் டேங்க், இரண்டு சைலென்சர்கள் ஆகியவை மஹிந்திரா மோஜோ பைக்கின் தோற்றத்திற்கு வலு சேர்க்கும் முக்கிய அம்சங்கள்.

எஞ்சின்

எஞ்சின்

எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட 295சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 27 குதிரைசக்தி திறனையும், 30 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடினமான நிலைகளில் வைத்து நாம் டெஸ்ட் டிரைவ் சோதனையின்போது, லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் வழங்கியது. சாதாரணமாக லிட்டருக்கு 25 கிமீ முதல் 30 கிமீ வரையிலான மைலேஜை வழங்கும் என நம்பலாம். 21 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பைரெல்லி டயாப்லோ ராஸோ II டயர்கள், முன்புறத்தில் 320மிமீ விட்டம் கொண்ட பெட்டல் டிஸ்க் பிரேக், பின்புறத்தில் 240மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக் சிஸ்டமும் உள்ளது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

கிளேசியர் ஒயிட், சார்கோல் பிளாக் மற்றும் வல்கானோ ரெட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

விலை விபரம்

விலை விபரம்

ரூ.1.58 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட் டூரர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள 10 டீலர்ஷிப்புகள் வழியாக முதலில் விற்பனைக்கு வந்துள்ளது.

அமோக வரவேற்பு

அமோக வரவேற்பு

இதுவரை 100 பைக்குகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. தற்போது விலை விபரமும் வெளியிடப்பட்டு இருப்பதால், முன்பதிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயன்பாடு

பயன்பாடு

தினசரி பயன்பாட்டிற்கும், நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்ற சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் டூரர் வகை மோட்டார்சைக்கிளாக இருக்கிறது. இதன் சைலென்சர் சப்தமும் இளைஞர்களை கவரும் என நம்பலாம்.

டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

மஹிந்திரா மோஜோ பைக்கின் சாதக, பாதகங்கள், பயன்பாட்டை பற்றி அலசும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மஹந்திரா மோஜோ பைக் விற்பனைக்கு வந்தது

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்

 

English summary
Mahindra Mojo has launched in India at an introductory price of INR 1,58,000 (ex-showroom, Delhi). The Indian two-wheeler manufacturer will provide Mojo, at this exciting price only till this Diwali.
Story first published: Thursday, October 15, 2015, 15:43 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark