மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக்கின் அதிகாரப்பூர்வ விபரங்கள்!

Written By:

இந்திய ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை கணித்து, 5 ஆண்டுகளுக்கு முன்பே, மோஜோ என்ற ஆரம்ப ரக பைக் கான்செப்ட்டை மஹிந்திரா இருசக்கர வாகன நிறுவனம் அறிமுகம் செய்தது.

ஆனால், பல்வேறு தடங்கல்கள், தாமதங்களுக்கு பின்னர், ஒருவழியாக மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக் தற்போது மார்க்கெட்டை நெருங்கியிருக்கிறது. தினசரி பயன்பாடு மற்றும் நீண்ட தூர பயன்பாடு என இரண்டிற்கும் ஏற்ற ஓர் கலவையான அம்சங்கள் கொண்ட  பைக்காக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

வரும் 16ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக்கை தற்போது மீடியா டிரைவ் நிகழ்ச்சியில் மூலமாக டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்து வருகிறது. இந்தநிலையில், இந்த பைக்கின் தொழில்நுட்ப அம்சங்கள், சிறப்பம்சங்களை சுடச்சுட வாசகர்களுக்கு வழங்குவதில் டிரைவ்ஸ்பார்க் பெரு மகிழ்ச்சி கொள்கிறது.

டிசைன் அம்சங்கள்

டிசைன் அம்சங்கள்

கான்செப்ட் மாடலிலிருந்து அதிக வேறுபாடுகளுடன் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு வட்ட வடிவ ஹெட்லைட்டுகள் ஆந்தை முக அமைப்பை ஒத்திருப்பதால், அச்சமூட்டும் தோற்றத்தை தருகிறது. எல்இடி பகல்நேர விளக்குகளுடன் ஹெட்லைட் வசீகரிக்கிறது. பிரம்மாண்டமான பெட்ரோல் டேங்க், அதில் முப்பரிமாண மஹிந்திரா மற்றும் மோஜோ பேட்ஜ்கள் ஆகியவை வசீகரத்தை தருகிறது.

 வசீகரிக்கும் டிசைன் அம்சங்கள்

வசீகரிக்கும் டிசைன் அம்சங்கள்

இரட்டை வண்ண இருக்கைகள், தங்க நிற ஃப்ரேம்கள், இரட்டை புகைப்போக்கி குழாய்கள், 12 எல்இடி விளக்குகள் கொண்ட டெயில் லைட் க்ளஸ்டர், கருப்பு நிற அலாய் வீல்கள் போன்றவை இந்த பைக்கின் தோற்றத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன.

 வடிவம்

வடிவம்

மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக் 2,100மிமீ நீலம், 800மிமீ அகலம், 1,165.5மிமீ உயரம் கொண்டது. இந்த பைக் 1,465மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கிறது. அத்துடன் 173.5 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மூலமாக நகர்ப்புறம், நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த பைக் 165 கிலோ எடை கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

மஹிந்திரா மோஜோ பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 300சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த பைக்கில் இரிடியம் ஸ்பார்க் ப்ளக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு கான்ஸ்டன்ட் மெஷ் கியர்பாக்ஸ் இருக்கிறது. அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க்கையும் அளிக்கும் வல்லமை கொண்டது.

 மீட்டர் கன்சோல்

மீட்டர் கன்சோல்

இந்த பைக்கில் அனலாக் மற்றும் டிஜிட்டர் திரை கொண்ட மீட்டர் கன்சோல் அமைப்பு கொண்டுள்ளது. இரண்டு ட்ரிப் மீட்டர்கள், 0-100 கிமீ வேகத்தை எத்தனை வினாடிகளில் எட்டுகிறது என்பதை தெரிந்துகொள்வதற்கான வசதி, எவ்வளவு வேகத்தை அதிகபட்சம் தொட்டிருக்கிறது என்பதை காட்டும் வசதி, எல்இடி ஆர்பிஎம் இண்டிகேட்டர் என பல வசதிகளை பெற முடிகிறது. ரோல்ஓவர் குறித்து எச்சரிக்கும் சென்சாரும் உண்டு.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

இந்த பைக்கில் 21 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது நீண்ட தூர பயணங்களுக்கு மிக ஏதுவானதாக இருக்கும். இதன் உண்மையான மைலேஜ் விபரம் இன்றைய டெஸ்ட் டிரைவின்போது தெரிந்துவிடும். அதனை டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டில் வழங்குகிறோம்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை என மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இதில், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்கள் தங்க நிறை பாகங்கள் மூலமாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

இந்த பைக்கில் ட்வின் ட்யூபப் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் 143.5மிமீ நகரும் அமைப்புடைய டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் அதிக அழுத்தத்திலான கேஸ் சார்ஜ்டு மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன.

 பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

மஹிந்திரா மோஜோ பைக்கில் முன்புறத்தில் ரேடியல் காலிபருடன் கூடிய 320மிமீ விட்டம் கொண்ட பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் ஃப்ளோட்டிக் காலிபர் கொண்ட 240மிமீ விட்டத்திலான டிஸ்க் பிரேக்கும் உள்ளன.

டயர்கள்

டயர்கள்

இந்த பைக்கில் பிரிமியம் பைரெல்லி டயாப்லோ ராஸோII டயர்கள் ஆகியவையும் இந்த பைக்கின் மதிப்பை உயர்த்தும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.1.70 லட்சம் முதல் ரூ.2 லட்சத்திற்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் விமர்சன கட்டுரை

விரைவில் விமர்சன கட்டுரை

எமது டெஸ்ட் டிரைவ் விமர்சனத்தை விரைவில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம். டெஸ்ட் டிரைவ் படங்கள் மற்றும் சுவையான தகவல்களை அறிந்துகொள்வதற்கு எங்களது சமூக வலைதள பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்

 
English summary
Mahindra Mojo Official Details Revealed.
Story first published: Thursday, October 8, 2015, 10:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark