மூன்று சக்கர பீஜோ ஸ்கூட்டரை இந்தியா கொண்டு வரும் மஹிந்திரா!

ட்ரைக் எனப்படும் மூன்றுசக்கர அமைப்பு கொண்ட புதிய பீஜோ ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த மஹிந்திரா இருசக்கர வாகன நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பீஜோ ஸ்கூட்டர் நிறுவனத்தை வாங்கியிருக்கும் மஹிந்திரா நிறுவனம், அந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில், பீஜோவின் மூன்று சக்கர ஸ்கூட்டர் மாடலை இந்தியா கொண்டு வருவதற்கு மஹிந்திரா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முற்றிலும் வித்தியாசமான ஸ்கூட்டர் மாடல் என்பதால் இந்தியர்கள் மத்தியில் இந்த செய்தி ஆவலை கிளப்பியிருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மெட்ரோபொலிஸ்

மெட்ரோபொலிஸ்

ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் பீஜோவின் மெட்ரோபொலிஸ் ட்ரைக் ஸ்கூட்டர் மாடல்தான் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக கருதப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

பீஜோ மெட்ரொபொலிஸ் ஸ்கூட்டரில் 37 பிஎச்பி பவரை அளிக்கும் 400சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும். ஆனால், இந்தியாவிற்கு 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலை கொண்டு வருவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரத்யேக சஸ்பென்ஷன்

பிரத்யேக சஸ்பென்ஷன்

முன்புறத்தில் இருக்கும் இரண்டு சக்கரங்களும் வளைவுகளில் திரும்பும்போது தானாகவே அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 144 கிமீ வேகம் வரை செல்லக்கூடியதாக இருக்கும்.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

இந்த ஸ்கூட்டரில் 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கும்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

ஹீரோ Zir, ஹோண்டா PCX150 போன்ற அதிக சக்திகொண்ட ஸ்கூட்டர் மாடல்களுடன் இந்த புதிய பீஜோ ட்ரைக் ஸ்கூட்டர் போட்டியிடும்.

இந்தியா வருவது எப்போது?

இந்தியா வருவது எப்போது?

இந்த ஸ்கூட்டர் உடனடியாக இந்தியா வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஓரிரு ஆண்டுகளில் இந்தியா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Mahindra is planning to launch Peugeot scooters to Indian market, reports suggesting that Mahindra is also considering a three wheeled scooter for Indian market also commonly known as trikes.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X