எம்வி அகஸ்டா எஃப்4 சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

By Ravichandran

எம்வி அகஸ்டா நிறுவனத்தின் எஃப் 4 சூப்பர்பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எம்வி அகஸ்டா நிறுவனம் இந்தியாவில், கைனடிக் குழுமத்தின் கூட்டணியில் பைக் வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது.

எம்வி அகஸ்டா, கைனடிக் குழுமத்துடன் தொழில்நுட்ப ரீதியிலும், வர்த்தக ரீதியிலும், இணைந்து பணியாற்றுகின்றனர். இந்த கூட்டணி தற்போது ப்ரூடேல் 1090 மற்றும் எஃப் 4 சூப்பர் பைக்கை புனேவில் அறிமுகப்படுத்தினர்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

எம்வி அகஸ்டாவின் எஃப் 4, நான்கு சிலிண்டர்கள் கொண்ட, 998 சிசி அளவு கொண்ட லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இது 192.25 பிஹெச்பி திறனையும், உச்சபட்சமாக 110.8 என்எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப அம்சங்கள்;

தொழில்நுட்ப அம்சங்கள்;

மேம்பட்ட வாகனம் இயக்கும் அனுபவங்களை வழங்குவதற்காக இந்த எஃப் 4 சூப்பர்பைக் பல்வேறு எலக்ட்ரானிக் உபகரணங்கள் கொண்டுள்ளது.

இதில், மோட்டார் அண்ட் வெஹிகிள் இண்டெக்ரேடட் சிஸ்டம், எலக்ட்ரானிக்கல் அசிஸ்ட் ஷிஃப்ட், டார்க் ஷிஃப்ட் சிஸ்டம், லீன் ஆங்கிள் சென்ஸார், 8-ஸ்டேஜ் டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

சிஆர்எம்ஓ டியூபுலார் ட்ரெல்லிஸ் ஃபிரேம் கொண்ட மர்ஃஜோச்சி அப் சைட் டவுன் டெலஸ்கோபிக் ஃப்ரண்ட் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது.

மேலும், இதில் ரீ-பவுண்ட்-கம்ப்ரெஷன் மற்றும் ஸ்பிரிங் ப்ரீலோட் வசதி கொண்ட சேக்ஸ் பிராக்ரஸ்ஸிவ் சிங்கிள் ஷாக் அப்சார்பர் வசதியும் உள்ளது.

சக்கரம், பிரேக் அமைப்பு;

சக்கரம், பிரேக் அமைப்பு;

எம்வி அகஸ்டா எஃப் 4 சூப்பர்பைக், 17 இஞ்ச் அல்லாய் சக்கரம் கொண்டுள்ளது. இதில் உள்ள ப்ரெம்போ ஃப்ரண்ட் மற்றும் நிஸ்ஸின் ரியர் டிஸ்க் பிரேக்கள், போஷ் ஏபிஸ்-ஸால் நிர்வகிக்கப்படுகிறது.

போட்டி பைக்குகள்;

போட்டி பைக்குகள்;

எம்வி அகஸ்டா எஃப் 4 சூப்பர்பைக்-கிற்கு நேரடி போட்டியாக விளங்குவது, டுக்காட்டியின் டுக்காட்டி பனிகேல் சூப்பர் பைக் என்றே கூறலாம்.

இத்தாலியின் இரு நிறுவனங்களான எம்வி அகஸ்டா மற்றும் டுக்காட்டி இந்திய இரு சக்கர வாகன சந்தையில் கடுமையாக போட்டி போட்டு கொண்டிருகின்றன.

பிஎம்டபுள்யூ எஸ்1000ஆர்ஆர், சுசுகி ஜிஎஸ்எக்ஸ் மற்றும் ஆப்ரிலியா ஆர்எஸ்வி4 உள்ளிட்ட சூப்பர் பைக்குகளும் எம்வி அகஸ்டா எஃப் 4, சவால் விடுத்து கொண்டிருக்கிறது.

புக்கிங்;

புக்கிங்;

ப்ரூடேல் 1090 மற்றும் எஃப் 4 சூப்பர் பைக்கின் புக்கிங் 50 சதவிகித டவுன் பேமண்ட் முறையில் செய்யபடுகிறது.

அனைத்து புக்கிங்களும் motoroyale.in எனப்படும் இணையதளம் மூலம் செய்யபடுகிறது. இந்த இணையதளம் தான், இந்திய சந்தையில் இந்த வாகனஙகளை புக்கிங் செய்வதற்காக, எம்வி அகஸ்டா நிறுவன சார்பாக அலுவல் ரீதியாக இயங்கும் இணையதளமாகும்.

டெலிவரி;

டெலிவரி;

இந்த பைக்குகளின் டெலிவரி அடுத்த சில வாரங்களில் துவங்கிவிடும் என எதிர்பார்க்கபடுகிறது.

விலை;

விலை;

எம்வி அகஸ்டாவின் இந்த எஃப் 4 சூப்பர்பைக்கள், இந்திய மதிப்பில் 25.5 லட்சம் ருபாய் (எக்ஸ்-ஷோரூம்) புனே விலையில் கிடைக்கிறது.

ஷோரூம் திறப்பு;

ஷோரூம் திறப்பு;

எம்வி அகஸ்டா அடுத்த ஆண்டுக்குள், அந்நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூம்களை திறந்து, இயக்க துவங்கிவிடும் என தெரிகிறது.

வருங்கால வெளியீடுகள்;

வருங்கால வெளியீடுகள்;

எம்வி அகஸ்டா எஃப் 4 மற்றும் ப்ரூடேல் 1090 சூப்பர்பைக்களின் அறிமுகத்தை அடுத்து, எஃப்3 சூப்பர்பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த எஃப்3 சூப்பர் பைக் அடுத்த ஆண்டு புது டெல்லியில் நிகழ இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
MV Agusta F4 superbike is launched In India. The motorcycle brand is famous for developing ‘Art on Two-wheels'. MV Agusta is partnering with Kinetic group for the Indian market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X