ரூ.75,000 முதல் புதிய பஜாஜ் அவென்ஜர் பைக் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

மிக சவாலான ஆரம்ப விலையில், புதிய பஜாஜ் அவென்ஜர் பைக் மாடல்கள் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. முதல்முறையாக பஜாஜ் அவென்ஜர் பைக் 220சிசி மாடல் மட்டுமின்றி, 150சிசி எஞ்சின் கொண்ட மாடலிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவின் மிக குறைவான விலை கொண்ட க்ரூஸர் பைக் மாடலாக வந்திருக்கும் இந்த புதிய பஜாஜ் அவென்ஜர் பைக் மாடல்களின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

மூன்று மாடல்கள்

மூன்று மாடல்கள்

புதிய பஜாஜ் அவென்ஜர் பைக் க்ரூஸ் மற்றும் ஸ்ட்ரீட் என்ற இரு பாடி ஸ்டைல்களில் மூன்று மாடல்களில் வந்துள்ளது. பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150, பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 மற்றும் அவென்ஜர் க்ரூஸ் 220 ஆகிய மாடல்களில் கிடைக்கும்.

வேறுபாடுகள்

வேறுபாடுகள்

ஸ்ட்ரீட் மாடல்கள் கருப்பு வண்ண அலாய் வீல்கள், எஞ்சின், கிராப் ரெயில் என அனைத்தும் கருப்பு நிறத்தில், ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் தோற்றத்தை ஒத்திருக்கிறது. அவென்ஜர் க்ரூஸ் 220 மாடல் பேக்ரெஸ்ட், விண்ட்ஷீல்டு போன்றவற்றோடு, அதிக குரோமிய பாகங்களால் முழுமையான க்ரூஸர் பைக் தோற்றத்தை பெற்றிருக்கிறது.

220சிசி மாடல் எஞ்சின்

220சிசி மாடல் எஞ்சின்

பஜாஜ் அவென்ஜர் 220சிசி மாடலில் இருக்கும் 219.9சிசி எஞ்சின் அதிகபட்சமாக 19 பிஎஸ் பவரையும், 17.5 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

150சிசி மாடல்

150சிசி மாடல்

150சிசி மாடலில் இருக்கும் 149சிசி எஞ்சின் அதிகபட்சமாக 14.5 பிஎஸ் பவரையும், 12.5 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த மாடலிலும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் உள்ளது.

பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

அவென்ஜர் 150 சிசி மாடலின் முன்புற சக்கரத்தில் 240மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும், 220சிசி மாடலின் முன்புற சக்கரத்தில் 260மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் உள்ளது. பின்புறத்தில் 130மிமீ டிரம் பிரேக் சிஸ்டம் உள்ளது.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

நீண்ட தூர பயணங்களுக்கான க்ரூஸர் பைக் மாடல்களில் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு மிக முக்கியமானது. அந்த வகையில், இரண்டு மாடல்களிலும் 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எடை

எடை

220சிசி அவென்ஜர் பைக்கின் க்ரூஸ் மாடல் 155 கிலோ கெர்ப் எடையையும், ஸ்ட்ரீட் மாடல் 150 கிலோ கெர்ப் எடையையும் கொண்டது. 150சிசி மாடல் 148 கிலோ எடை கொண்டது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

புதிய அவென்ஜர் க்ரூஸ் 220 மாடல் டிவைன் பிளாக் என்ற கருப்பு நிறத்திலும், 220 ஸ்ட்ரீட் மாடல் மேட் பிளாக் என்ற கருப்பு நிறத்திலும், 150 ஸ்ட்ரீட் மாடல் மிட்நைட் புளூ என்ற அடர் நீல வண்ணத்திலும் கிடைக்கும்.

விலை விபரம்

விலை விபரம்

அவென்ஜர் ஸ்ட்ரீட் 150: ரூ.75,000

அவென்ஜர் ஸ்ட்ரீட் 220: ரூ.84,000

அவென்ஜர் க்ரூஸ் 220: ரூ.84,000

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

Most Read Articles
English summary
Bajaj has launched the new Avenger cruiser motorcycle in India for a starting price of Rs. 75,000 ex-showroom (Delhi).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X