முதல்முறையாக கேமரா கண்ணில் சிக்கிய புதிய பஜாஜ் அவென்ஜர்!

Written By:

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய பஜாஜ் அவென்ஜர் பைக்கின் ஸ்பை ஷாட்கள் வெளியாகியுள்ளன. தற்போது வெளியாகியிருக்கும் புதிய பஜாஜ் அவென்ஜர் பைக் முற்றிலும் கருப்பு நிறத்தில் அசத்தலாக இருக்கிறது.

டிசைனில் அதிக மாறுதல்கள் தென்படவில்லை. எனினும், ஆங்காங்கே சில மாறுதல்கள் மற்றும் கருப்பு வண்ணத்தின் மூலமாக விலையுயர்ந்த க்ரூஸர் மாடல்களுடன் போட்டி போடும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது.

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட்

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட்

புகைப்போக்கி குழாய், எஞ்சின், க்ராப் ரெயில், பெட்ரோல் டேங்க் என அனைத்துமே கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், இதன் அலாய் வீல் டிசைன் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கை ஒத்திருக்கிறது.

புதிய வண்ணங்கள்

புதிய வண்ணங்கள்

கருப்பு நிறத்தை தவிர்த்து,சிவப்பு- வெள்ளை வண்ணக் கலவையில் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள் அலங்கரிக்கின்றன. கருப்பு வண்ணத்தை தவிர்த்து, பிற வண்ணங்களிலும் இந்த பைக் மாடல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மீட்டர் கன்சோல்

புதிய மீட்டர் கன்சோல்

அனலாக் ஸ்பீடோமீட்டர் டயலுக்குள் சிறிய அளவிலான டிஜிட்டல் மீட்டரும், பேக்லிட் கொண்ட பஜாஜ் லோகோவும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எரிபொருள் மானி, இன்டிகேட்டர் ஆகியவை பழையபடி பெட்ரோல் டேங்கின் மூடிக்கு அருகில் உள்ளன.

 மூன்று மாடல்கள்

மூன்று மாடல்கள்

புதிய பஜாஜ் அவென்ஜர் பைக் மூன்று மாடல்களில் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 220சிசி எஞ்சினுக்கு பதிலாக 200சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ஒரு லட்ச ரூபாய் ஆரம்ப விலையில் புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலும் இந்தியாவின் குறைவான விலை க்ரூஸர் ரக பைக் மாடல் என்ற பெயரை தொடர்ந்து தக்க வைக்கும் என்று நம்பலாம்.

Spy Shots: Mohan Kumar 

English summary
The new Bajaj Avenger has been spotted for the first time in dealership.
Story first published: Monday, October 5, 2015, 9:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark