மே மாதம் ரிலீசாகும் புதிய பஜாஜ் பல்சர் 150என்எஸ் - விறுவிறு ட்ரெய்லர்!!

Written By:

அடுத்த மாதம் பல்சர் வரிசையில் புதிய 150சிசி பைக் மாடலை பஜாஜ் ஆட்டோ களமிறக்குகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் பல்சர் 200என்எஸ் மாடல் போன்றே இதுவும் நேக்டு பாடி ஸ்டைலில் 150சிசி மாடலாக வருவதால், ஆவலை கிளப்பியிருக்கிறது.

இளைஞர்களை கவரும் ஸ்டைல், சிறந்த எஞ்சின் போன்றவை இந்த பைக்கிற்கு வரவேற்பை பெற்று கொடுக்கும் வாய்ப்புள்ளது. இந்த பைக்கிற்காக காத்திருக்கலாமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தெரிந்துகொண்டால், நீங்களே சட்டென முடிவு செய்துகொள்ளலாம்.

டிசைன்

டிசைன்

தற்போது விற்பனையிலிருக்கும் பல்சர் 200என்எஸ் பைக்கிற்கும் இந்த பைக்கிற்கும் டிசைனில் அதிக வித்தியாசங்கள் இருக்காது. அதே நேக்டு பாடி ஸ்டைல் மாடலாகத்தான் வருகிறது.

 வடிவம்

வடிவம்

புதிய பல்சர் 150என்எஸ் பைக் 2,015மிமீ நீளமும், 800மிமீ அகலமும், 1,220மிமீ உயரமும் கொண்டது. இந்த பைக் 1,363மிமீ வீல்பேஸ் கொண்டதாக வருகிறது.

 ஸ்பிளிட் இருக்கைகள்

ஸ்பிளிட் இருக்கைகள்

ஸ்பிளிட் இருக்கைகள் கொண்டதாக இருப்பதும் ஓட்டுனருக்கு வசதியாக அமர்ந்து ஓட்டுவதற்கு துணைபுரியும். மேலும், ஒரு ஸ்போர்ட்டியான. இருக்கை அமைப்பை கொண்டிருப்பதும், உங்கள் எதிர்பார்ப்பை உடனடியாக பூர்த்தி செய்யும்

எஞ்சின்

எஞ்சின்

பல்சர் 150என்எஸ் பைக்கில் 4 வால்வ், ட்வின் ஸ்பார்க் டிடிஎஸ்ஐ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 9,500ஆர்பிஎம்.,மில் அதிகபட்சமாக 16.3 பிஎச்பி பவரையும், 7,500ஆர்பிஎம்.,மில் அதிகபட்சமாக 13 என்எம் டார்க்கையம் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வருகிறது.

 இதர முக்கிய அம்சங்கள்

இதர முக்கிய அம்சங்கள்

அலாய் வீல்கள், ட்யூப்லெஸ் டயர்கள், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் ஆகியவை இந்த பைக்கின் மிக முக்கிய சிறப்பம்சங்கள்.

 எடை

எடை

இந்த பைக் 144 கிலோ எடை கொண்டதாக இருக்கும். 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.70,000 முதல் ரூ.75,000 விலையில் இந்த புதிய பஜாஜ் பல்சர் 150என்எஸ் பைக் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பட்ஜெட் விலையில், ஸ்டைலான பைக் மாடல் என்பதால், இளைஞர்களை வெகுவாக கவரும் வாய்ப்புள்ளது.

[குறிப்பு: மாதிரிக்காக பல்சர் 200என்எஸ் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.]

 
English summary
Bajaj will launch an all-new Pulsar 150NS for younger riders at an affordable price. In terms of design the new Pulsar 150NS will sport similar styling to its older sibling the 200NS. Just as Bajaj provided familiarity between their Adventure Sport models.
Story first published: Friday, April 24, 2015, 10:05 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark