பஜாஜ் பல்ஸர் ஆர்எஸ்200, புதிய வெள்ளை வண்ணத்தில் அறிமுகம் - முழு விவரங்கள்

Written By:

பஜாஜ் நிறுவனம், தங்களின் பஜாஜ் பல்ஸர் ஆர்எஸ்200 மோட்டார்சைக்கிளை, புதிய வெள்ளை வண்ணத்திலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் நிறுவனம், மெதுமெதுவாக தங்கள் நிறுவனத்தின் பல்ஸர் ஆர்எஸ்200 மோட்டார்சைக்கிள்களை பல்வேறு நிறங்களில் அறிமுகம் செய்து வருகின்றது.

பெயர்;

பெயர்;

அதிக அளவில் வெள்ளை நிறம் கொண்ட இந்த புதிய பஜாஜ் பல்ஸர் ஆர்எஸ்200 மோட்டார்சைக்கிளுக்கு, முறைப்படி எந்த பெயரையும் சூட்டவில்லை என தெரிகிறது.

இதர மாற்றங்கள்;

இதர மாற்றங்கள்;

நிறத்தை தவிர்த்து, இந்த புதிய வெள்ளை நிற பஜாஜ் பல்ஸர் ஆர்எஸ்200 பைக்கில், வேறு எந்த விதமான மாற்றங்களும் செய்யபடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

வேறு வண்ணங்கள்;

வேறு வண்ணங்கள்;

முன்னதாக, பஜாஜ் பல்ஸர் ஆர்எஸ்200 பைக்கின் அறிமுகத்தின் போது, யெல்லொ மற்றும் ரெட் நிறங்களில் அறிமுகம் செய்திருந்தது.

இந்த பைக்கின் அறிமுத்தை அடுத்து, புதிய பிளாக் நிறத்தில் பஜாஜ் பல்ஸர் ஆர்எஸ்200 அறிமுகம் செய்யபட்டு, அதற்கு ‘டிமான் பிளாக்' நிற பைக் என்று பெயரிடபட்டது.

இந்த வெள்ளை நிறம் அல்லாது, பஜாஜ் பல்ஸர் ஆர்எஸ்200, யெல்லொ, ரெட், டிமான் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கின்றது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பஜாஜ் பல்ஸர் ஆர்எஸ்200 பைக், 199.5 சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 24.16 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 18.6 டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாக உள்ளது. இது 6-ஸ்பீட் கியர்பஃஅக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

கிடைக்கும் விதங்கள்;

கிடைக்கும் விதங்கள்;

இந்த புதிய பஜாஜ் பல்ஸர் ஆர்எஸ்200 மோட்டார்சைக்கிள், ஸ்டாண்டர்ட் வெர்ஷன் மற்றும் ஏபிஎஸ் வசதி கொண்ட வெர்ஷனில் கிடைக்க உள்ளது.

விலையில் மாற்றம்?

விலையில் மாற்றம்?

புதிய வெள்ளை நிற பெயிண்ட் வேலைப்பாடு கொண்ட மோட்டார்சிக்கிளின் அறிமுகம், விலை அதிகமாக கூட்டும் நோக்கில் செய்யபடவில்லை என தெரிகிறது.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

புதிய வெள்ளை நிறம் கொண்ட பஜாஜ் பல்ஸர் ஆர்எஸ்200,

ஸ்டாண்டர்ட் வெர்ஷன் - 1.20 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

ஏபிஎஸ் வசதி கொண்ட வெர்ஷன் - 1.32 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

யூகிக்கபடும் பெயர்;

யூகிக்கபடும் பெயர்;

முன்னதாக பிளாக் நிறத்தில் அறிமுகம் செய்யபட்ட, பல்ஸர் ‘டிமான் பிளாக்' நிற பஜாஜ் பல்ஸர் ஆர்எஸ்200 பைக் என பெயரிடபட்டுள்ளது.

அதன்படியான யூகத்தின் அடிப்பைடயில் பார்த்தால், இந்த புதிய வெள்ளை பெயிண்ட் வேலைப்பாடு கொண்ட மோட்டார்சைக்கிளுக்கு, ‘ஏஞ்ஜலிக் வைட்' என்று பெயரிடபடலாம் என தெரிகின்றது.

வீடியோ;

புதிய வெள்ளை நிறத்தில் வெளியிடப்பட உள்ள பஜாஜ் பல்ஸர் ஆர்எஸ்200 பைக்கின் வீடியோவை, இங்கே உங்களுக்காக வழங்கப்படுகிறது.

English summary
New Bajaj Pulsar RS200 Bike In White Paint Job is to be Launched Soon. Bajaj Motorcycles is slowly and steadily introducing new paint jobs to it Pulsar RS200 motorcycles collection. Until now, Bajaj Auto has not revealed the official name of this new paint scheme.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark