2016 ஹீரோ ஹங்க் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தங்களின் புதிய ஹங்க் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளனர்.

இந்தியாவின் நான்கு சக்கர வாகனங்களில் இருக்கும் போட்டியினை போல், இரு சக்கர வாகன சந்தையிலும் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த போட்டிகளை சமாளிக்க, இரு சக்கர வாகனங்களை தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றனர்.

2 தேர்வுகள்;

2 தேர்வுகள்;

2016-ஆம் ஆண்டுக்கான புதிய ஹங்க் மோட்டார்சைக்கிளை, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய மேம்பாடுகளுடன் வழங்கியுள்ளது.

புதிய ஹங்க் பைக் தற்போது, 2 தேர்வுகளில் வழங்குகின்றனர். பேஸ் மாடல் சிங்கிள் டிஸ்க் பிரேக் கொண்டிருக்கும்.

மற்றொரு வேரியண்ட், ரெட்ரோ ஃபிட்டிங் செய்யபட்ட, ஃப்ரண்ட் மற்றும் ரியர் டிஸ்க் பிரேக் கொண்டதாக உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய 2016 ஹங்க் மோட்டார்சைக்கிள், 150 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட், ஏடிஎஃப்டி இஞ்ஜின் கொண்டுள்ளது.

முந்தைய தலைமுறை ஹங்க்-கை காட்டிலும், இந்த புதிய ஹங்கின் திறனை இஞ்ஜினியர்கள் கூட்டியுள்ளனர். இந்த இஞ்ஜின் 15.6 பிஹெச்பி-யையும், 13.5 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

புதிய 2016 ஹங்க் மோட்டார்சைக்கிள், 5-ஸ்டெப் ப்ரீலோட் அட்ஜஸ்ட்மண்ட்கள் உடைய இன்வெர்டட் (தலைகீழான) ஜிஆர்எஸ் கேஸ்-சார்ஜ்ட் ரியர் ஷாக் அப்சார்பர்கள் கொண்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் இஞ்ஜினியர்கள், ஒரு விஸ்கஸ் (பிசுபிசுப்பு தன்மை) நிறைந்த ஏர் ஃபில்டரை பொருத்தியுள்ளனர்.

இவற்றை தவிர, இந்த புதிய ஹங்க் பைக்கில், வேறு எந்த விதமான பெரிய மெக்கானிக்கல் மாற்றங்களும் செய்யபடவில்லை.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

புதிய ஹங்க் பைக்கிற்கு வழங்கபட்டுள்ள மேம்பாடுகளின் ஒரு பகுதியாக, இது புதிய டீகல்கள் மற்றும் பெயிண்ட் வேலைபாடுகளுடன் கிடைக்கின்றது.

புதிய 2016 ஹீரோ ஹங்க் மோட்டார்சைக்கிள், போல்ட் பிரௌன், பேந்தர் பிளாக், எபோனி கிரே, ஃபோர்ஸ் சில்வர், பிலேசிங் ரெட் மற்றும் மேட் பிளாக் உள்ளிட்ட 6 புதிய மற்றும் ஈர்க்கும் நிறங்களில் கிடைக்க உள்ளது.

எங்கு வாங்கலாம்;

எங்கு வாங்கலாம்;

மேம்படுத்தபட்ட புதிய 2016 ஹீரோ ஹங்க் மோட்டார்சைக்கிள், இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து அங்கிகரிக்கபட்ட டீலர்ஷிபகளிலும் கிடைக்கிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சார்பாக விற்கபடும் மாடல்களில், ஹங்க் பைக்கும் மிக பிரசித்தி பெற்ற பைக்காக விளங்குகின்றது.

புதிய ஹங்க் பல்வேறு டீகேல்களுடனும், பெயிண்ட் வேலைப்பாடுகளுடனும், ஈர்க்கும் விலையில் கிடைக்கின்றது.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

புதிய 2016 ஹீரோ ஹங்க் மோட்டார்சைக்கிள், விலை விவரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

2016 ஹீரோ ஹங்க் மோட்டார்சைக்கிள் - சிங்கிள் டிஸ்க் பிரேக் கொண்டது - 69,725 ரூபாய்

2016 ஹீரோ ஹங்க் மோட்டார்சைக்கிள் - ஃப்ரண்ட் மற்றும் ரியர் டிஸ்க் பிரேக் கொண்டது - 72,825 ரூபாய்

குறிப்பு ; இந்த விலை விவரங்களை, அனைத்தும், எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் என்பது குறிப்பிடதக்கது.

செய்திகள் உடனுக்குடன்…

செய்திகள் உடனுக்குடன்…

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க ...

English summary
Hero MotoCorp has launched their All-New Hunk in India recently. Hero MotoCorp has presented the Hunk motorcycle with some new updates for the year 2016. The New Hero Hunk 2016 Bike is available in two choices, namely the base model with a single disc option and the next variant with retrofitted front and rear disc brake.
Story first published: Thursday, December 10, 2015, 16:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark