சப்புக் கொட்ட வைத்த இந்த பைக்கின் இந்தியாவுக்கு விலை அறிவிப்பு!

Written By:

அமெரிக்காவின், சிகாகோ நகரில் நடந்து வரும் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ் பைக் இந்தியா வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க கருப்பு நிற வண்ணத்தில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய பைக் உலக அளவில் பைக் பிரியர்களின் புருவத்தை உயர்த்தியிருக்கிறது.

Indian Dark Horse
 

இந்த புதிய க்ரூஸர் ரக பைக்கில் 138.9 என்எம் டார்க்கை வழங்கும் 1,811சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. ஏராளமான பாதுகாப்பு வசதிகளையும், சிறப்பம்சங்களையும் இந்த புதிய பைக் மாடல் பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இந்திய இணையப் பக்கத்தில் இந்த புதிய பைக்கின் விலை விபரம் வெளியிடப்பட்டிருக்கிறது. ரூ.21,99,999 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஆனால், அதிகாரப்பூர்வமாக எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்பது குறித்த தகவல் இல்லை.

English summary
Indian Motorcycles has revealed the price of its new 2015 Dark Horse model for Indian Market. The Indian Chief Dark Horse, mechanically identical to the Chief Classic, but designed it in matt black finish. 
Story first published: Thursday, February 19, 2015, 9:54 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark