கைக்கு எட்டும் விலையில் விற்பனைக்கு வந்தது புதிய சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்!!

Posted By:

இளைஞர்களை கவரும் டிசைன் மற்றும் தோதான விலையில் புதிய சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

குறைவான விலை கொண்ட ஃபுல் பேரிங் பைக் மாடலாக சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் வந்திருப்பது பல இளைஞர்களின் பைக் வாங்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. இந்த பைக்கின் முழு விபரங்கள் ஸ்லைடரில் காத்திருக்கின்றன.

 01. ஃபுல் ஃபேர்டு வெர்ஷன்

01. ஃபுல் ஃபேர்டு வெர்ஷன்

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நேக்டு பாடி ஸ்டைல் கொண்ட சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் ஃபுல் ஃபேர்டு வெர்ஷன் மாடலாக இந்த புதிய பைக் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

 02. ஏரோடைனமிக் டிசைன்

02. ஏரோடைனமிக் டிசைன்

சுஸுகி ஹயபுசா, ஜிஎஸ்எக்ஸ்- ஆர் ஆகிய சூப்பர் பைக்குகளின் ஏரேோடைனமிக் டிசைன் அடிப்படையில்தான் இந்த புதிய பைக் மாடலையும் சுஸுகி வடிவமைத்துள்ளது. எனவே, இது மிகவும் சிறப்பான ஏரோடைனமிக்கை வழங்கும் பைக் என்று சுஸுகி மார்தட்டுகிறது.

03. டிசைன் அம்சங்கள்

03. டிசைன் அம்சங்கள்

இந்த பைக்கின் ஃபேரிங் பேனல்கள் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தருவதோடு, தோற்றத்தை கவர்ச்சியாக காட்டுகிறது. எல்இடி டெயில் லைட்டுகள், கிளியர் லென்ஸ் இன்டிகேட்டர், டிஜிட்டல் மீட்டர் கன்சோல், அலுமினிய பூச்சுடன் கூடிய இரட்டை மஃப்ளர் சைலென்சர் ஆகியவையும் இந்த பைக்கின் தோற்றத்திற்கு வலுசேர்க்கின்றன.

04. எஞ்சின்

04. எஞ்சின்

சுஸுகி ஜிக்ஸெர் பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 155 சிசி ஏர்கூல்டு எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14.8 பிஎஸ் பவரையும், 14 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

05. வண்ணங்கள்

05. வண்ணங்கள்

கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். இதில், மோட்டோஜிபி ஸ்டைலிலான ஸ்டிக்கர் கொண்ட நீல வண்ண மாடல் சற்று கூடுதல் விலையில் கிடைக்கும்.

06. வடிவம்

06. வடிவம்

2,050 மிமீ நீளம், 785 மிமீ அகலம், 1,030மிமீ உயரம் கொண்டது. இதன் வீல் பேஸ் 1,330 மிமீ. 160மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட இந்த பைக்கின் கெர்ப் எடை 139 கிலோ.

 07. சஸ்பென்ஷன்

07. சஸ்பென்ஷன்

முன்புறத்தில் டெலிஸ்கோப்பில் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனும் இருக்கிறது.

08. பிரேக் சிஸ்டம்

08. பிரேக் சிஸ்டம்

முன்புறத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

09. சென்னை விலை

09. சென்னை விலை

சென்னையில் கருப்பு, வெள்ளை வண்ண ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடல்கள் ரூ.95,323 ஆன்ரோடு விலையிலும், மோட்டோஜிபி ஸ்டைலிலான ஸ்டிக்கர் கொண்ட மாடல் ரூ.97,005 ஆன்ரோடு விலையிலும் கிடைக்கும்.

 
English summary
Suzuki Motorcycle India has introduced its fully faired motorcycle in Indian market today. They have christened their new product as the Gixxer SF.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark