கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய டிவிஎஸ் ஃபீனிக்ஸ் பைக் அறிமுகம் - விபரம்

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய டிவிஎஸ் ஃபீனிக்ஸ் பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் இரு மாடல்களில் கிடைக்கும்.

இந்த செக்மென்ட்டில் முன்னிலை வகிக்கும் ஹோண்டா ஷைன் சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்தது. இதைத்தொடர்ந்து, யமஹா நிறுவனம் சல்யூடோ என்ற புதிய பைக் மாடலை அறிமுகம் செய்தது. இந்த நெருக்கடிகளை போக்கிக் கொள்ளவும், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்திருக்கிறது. கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

புதிய பெட்ரோல் டேங்க் டிசைன், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், புதிய வைசருடன் வந்திருக்கிறது. பாடி கலர் கிராப் ரெயில் கொடுக்கப்பட்டுள்ளது. இருக்கையில் சிவப்பு நிற தையல் கொடுக்கப்பட்டிருப்பதும், பெட்ரோல் டேங்கின் மீது முப்பரிமானத்திலான ஃபீனிக்ஸ் பேட்ஜ் கொடுக்கப்பட்டிருப்பதும் பிரிமியம் பைக் போன்ற உணர்வை தருகிறது.

 எஞ்சின்

எஞ்சின்

முந்தைய மாடலில் இருந்த அதே 124.5 சிசி எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 11 பிஎஸ் பவரையும், 10.8 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

இந்த பைக்கின் முன்புறத்தில் ஹைட்ராலிக் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேஜ் சார்ஜ்டு சீரிஸ் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

இந்த பைக் டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் கொண்டதாக இரு மாடல்களில் வந்துள்ளது. பேஸ் மாடல் டிரம் பிரேக் கொண்டதாகவும், உயர்வகை மாடலின் முன்புறத்தில் ரோட்டோ பெட்டல் டிஸ்க் பிரேக் கொண்டதாகவும் கிடைக்கும்.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

முழுவதுமான டிஜிட்டல் மீட்டர் கன்சோல், டாக்கோமீட்டர், ஹசார்டு விளக்குகள், ட்யூப்லெஸ் டயர்கள், எல்இடி பைலட் விளக்குகள் போன்றவற்றுடன் வண்டி எங்கு நிற்கிறது என்பதை எளிதாக கண்டுபிடிப்பதற்கான வெகிக்கிள் லோகேட்டர் வசதியும் உள்ளதால் இது இந்த செக்மென்ட்டின் பிரிமியம் மாடலாகவே கூறலாம். ஆனால், விலையில் அல்ல!

 வண்ணங்கள்

வண்ணங்கள்

செர்ரி ஒயிட், ஒயிட் நைட், ரெட் ஹாட், க்ரிம்ஸன் பிளாக், பிளாக் மேஜிக் மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய வண்ணங்களில் இந்த புதிய டிவிஎஸ் ஃபீனிக்ஸ் பைக் கிடைக்கும்.

விலை விபரம்

விலை விபரம்

டிரம் பிரேக் மாடல் ரூ.51,990 விலையிலும், டிஸ்க் பிரேக் மாடல் ரூ.55,899 விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read Articles
English summary
Chennai based TVS motors has launched 2015 model Phoenix 125 in India at a starting price of Rs. 51,990.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X