ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் சப்தத்தால் அதிரும் கோவா!
கோவாவில், இந்திய பைக் வீக் திருவிழா மட்டுமின்றி, ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்களுக்கான சிறப்பு ராலியும் சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 2,000 ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்கள் கோவாவில் குழுமியுள்ளனர்.
கடந்த 19ந் தேதி துவங்கிய ஹார்லி டேவிட்சன் தேசிய ராலி பந்தயத்தில் வெற்றிபெறும் 5 உரிமையாளர்களுக்கு கவுரவப்படுத்தும் விதத்தில், விருதுகளை ஹார்லி டேவிட்சன் உரிமையாளர் குழு வழங்க இருக்கிறது. அதாவது, நாட்டின் 4 மண்டலங்களில் நடந்த ஹார்லி டேவிட்சன் பைக் ராலியிலும், ஹார்லி டேவிட்சன் தேசிய ராலி பந்தயத்தில் ஒரே ஆண்டில் பங்கேற்ற 5 பேருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 75 ஹார்லி டேவிட்சன் உரிமையாளர்களும் கவுரவிக்கப்பட உள்ளனர். மேலும், முதல்முறையாக ஹார்லி டேவிட்சன் பைக்கை சிறப்பாக கஸ்டமைஸ் செய்யும் டீலர்களுக்கும் சிறப்பு விருது வழங்கப்பட உள்ளதாக ஹார்லி டேவிட்சன் தெரிவித்திருக்கிறது.
இதனால், கோவா முழுவதும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் எக்சாஸ்ட் சப்தமாகவே இருக்கிறது. மேலும், இந்தியாவில் கால் பதித்து 5 ஆண்டுகள் ஆவதை கொண்டாடி வரும் வேளையில், கோவாவிற்கு வருகை தரும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்களை பெருமகிழ்ச்சியுடன் வரவேற்பதாக ஹார்லி டேவிட்சன் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








