ஸ்நாப்டீல் தளத்தில் கடை திறந்தது வெஸ்பா!

Written By:

ஸ்நாப்டீல் தளத்தில் வெஸ்பா ஸ்கூட்டரை ஆன்லைன் மூலமாக வாங்குவதற்கான வசதியை பியாஜியோ நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் வாயிலாக வாகனங்களை வாங்கும் மனப்போக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மெல்ல அதிகரித்து வருகிறது.

Snapdeal Vespa
  

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் மஹிந்திரா டூ வீலர்ஸ் நிறுவனங்களை தொடர்ந்து தற்போது வெஸ்பா ஸ்கூட்டர் நிறுவனமும் ஆன்லைன் மூலமாக விற்பனையை துவங்கியுள்ளது.

இதற்காக, ஸ்நாட்டீல் தளத்துடன் வெஸ்பாவின் தாய் நிறுவனமான பியாஜியோ ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஸ்நாப்டீல் தளத்தின் மூலமாக வெஸ்பா ஸ்கூட்டரை வாங்கும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகையை பெறலாம்.

ஸ்நாப்டீல் தளத்தின் மூலமாக வெஸ்பா எஸ், வெஸ்பா எலிகன்ட், வெஸ்பா மற்றும் விஎக்ஸ் ஆகிய வெஸ்பா வரிசை மாடல்களை ரூ.5,000 முன்பணம் செலுத்தி முன்பணம் செய்து கொள்ளலாம்.

English summary
Now Piaggio's premium automatic scooter offering the Vespa will be sold through Snapdeal. The entire range of Vespa scooters will be only a click away for customers.
Story first published: Saturday, May 23, 2015, 12:22 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark