10 லட்சத்திற்குள் புதிய க்ரூஸர் பைக்: இந்தியன் நிறுவனம் திட்டம்

Written By:

ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலை கொண்ட புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்வது குறித்து போலரிஸ் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

போலரிஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் சிறப்பான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் கால் பதித்தது முதல் இதுவரை 200 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. ரூ.11.99 லட்சம் முதல் ரூ.34.95 லட்சம் வரையிலான விலையில் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியன் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

Indian Motorcycles
 

இந்த நிலையில், ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலை கொண்ட மாடலை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் களமிறக்க இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான போலரிஸ் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், ஒரு ஸ்திரமான வர்த்தகத்தை இந்தியா போன்ற நாடுகளில் பெற முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.

ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட க்ரூஸர் வகை மோட்டார்சைக்கிள்களுக்கு இது நேரடி போட்டியை கொடுக்கும்.

English summary
Polaris is planning on a sub INR 10,00,000 cruiser motorcycle by Indian Motorcycles for certain markets. The American based cruiser bike maker would surely benefit from a reduction in price.
Story first published: Thursday, May 28, 2015, 17:04 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos