டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் அர்பன் எண்ட்யூரோ மாடல் இந்தியாவில் அறிமுகம் - விபரம்

Written By:

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் அர்பன் எண்ட்யூரோ பைக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

டுகாட்டி மோட்டர்சைக்கிள் நிறுவனத்தின் ஷோரூம் பெங்களூரூவில் திறக்கபட்டுள்ளது. இந்த புதிய ஷோரூம் திறப்பின் போது தான், டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் அர்பன் எண்ட்யூரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் அர்பன் எண்ட்யூரோ 830 சிசி, எல்-ட்வின் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் 75 பிஹெச்பி-யையும், 68 என்எம் டார்க்கையும் வெளியிடும் திறன் கொண்டுள்ளது. இது 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

வடிவமைப்பு;

வடிவமைப்பு;

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் அர்பன் எண்ட்யூரோ வைல்ட் கிரீன் பெயிண்ட் வேலைப்பாடுகள் கொண்டுள்ளது.

இது, ரெகுலர் ஸ்க்ராம்ப்ளர் ஐக்கான் மாடலை மையமாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

எனினும், இது பல்வேறு விதமான புதிய மற்றும் பிரத்யேகமான உபகரணங்களை, ஸ்டாண்டர்ட் உபகரணங்களாக கொண்டுள்ளது.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் அர்பன் எண்ட்யூரோ 18-இஞ்ச் பிரண்ட் (முன்) சக்கரமும், 17-இஞ்ச் ரியர் (பின்) சக்கரமும் கொண்டுள்ளது.

இது பிரெல்லி ட்யூவல் ஸ்போர்ட் டையர்களை கொண்டுள்ளது. மேலும், கிராஸ்பார்களுடன் கூடிய ஆஃப்ரோட் ஹாண்டல் பார் கொண்டுள்ளது.

ஆஃப்-ரோட் பெர்ஸோனா (தோற்றம்) அளிக்க கூடிய வகையில், இதன் மட் கார்டுகள், உயர்த்தி பொருத்தபட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

இந்த டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் அர்பன் எண்ட்யூரோ மோட்டர்சைக்கிளுக்கு, டுகாட்டி வடிவமைப்பாளர்கள் கிரில் புரொடெக்டருடன் (கிரில்லுடன் கூடிய ஹெட்லைட் கவசம்) கூடிய எல்ஈடி ரிங் ஹெட்லைட் வழங்கியுள்ளனர்.

அதிகபடியான வசதிக்காக, ரிப்ட் (ஸ்ட்ரைப்கள் போன்ற அமைப்புடைய) சீட் பொருத்தப்பட்டுள்ளது.

டேங்க் கவர்கள், பெல்ட் கவர்கள், எக்ஸ்ஹாஸ்ட் பைப் ஹீட் கவர் மற்றும் அண்டர் சீட் ஸ்ட்ரைப் (சீட்டின் அடியில் உள்ள ஸ்ட்ரைப்பில்) உள்ளிட்ட இடங்களில் அதிக அளவிலான அலுமினியத்தின் பயன்பாடு செய்யபட்டுள்ளது.

புதிய வெளியீடு;

புதிய வெளியீடு;

டுகாட்டியின் புதிய வெளியீடான, தி ஸ்க்ராம்ப்ளர் 400, எந்த வித உருமறைப்பும் இல்லாமல் படம் பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது, இது தான் டுகாட்டி தரப்பில் இருந்து, மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் மோட்டர் சைக்கிளாக இருக்கும்.

Photo credit : motociclismo.it

விலை;

விலை;

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் அர்பன் எண்ட்யூரோ மோட்டர்சைக்கிள், சுமார் 7,90,000 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் பெங்களூரூ) என்ற விலையில் கிடைக்கின்றது.

பெங்களூரூ ஷோரூம் முகவரி;

பெங்களூரூ ஷோரூம் முகவரி;

டுகாட்டி நிறுவனம், தென் இந்தியாவின் பெங்களூரூவில் தங்கள் முதல் ஷோரூமை திறந்துள்ளனர்.

பெங்களூரூவில் திறக்கபட்டுள்ள டுகாட்டி ஷோரூம் முகவரி;

யூபி சிட்டி,

24, விட்டல் மால்யா ரோடு,

பெங்களூரூ - 560001,

கர்நாடகா.

English summary
Ducati launches the Scrambler Urban Enduro motorcycle in India with a price tag of Rs. 7.90 lakh ex-showroom (Bangalore). Ducati launched the motorcycle, during the inauguration of Ducati's Bangalore dealership. Ducati will soon be offering the Scrambler Urban Enduro all over India.
Story first published: Friday, November 13, 2015, 16:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark