புதிய 400சிசி அட்வென்ச்சர் டூரர் ரக பைக்கை தயாரிக்கும் ராயல் என்ஃபீல்டு?

Posted By:

உலகின் பழமையான மோட்டார்சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அட்வென்ச்சர் டூரர் ரகத்தில் புதிய மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவது உறுதியாகியுள்ளது.

இந்த புதிய மோட்டார்சைக்கிளுக்கான பெயரை அந்த நிறுவனம் பதிவு செய்திருக்கிறது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் என்ற பெயரில் இந்த புதிய பைக் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Royal Enfield Bike
 

இந்த புதிய பைக் மாடலில் 400சிசி எஞ்சினை பொருத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. அதாவது, தற்போது அந்த நிறுவனத்தின் வசம் இருக்கும் 350சிசி எஞ்சினில் மாற்றங்களை செய்து 400சிசி எஞ்சினாக மாற்றி பொருத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த புதிய பைக் மாடல் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மாடலின் பிளாட்ஃபார்மை கொண்டு வடிவமைக்கப்படுகிறதாம்.

பைக்கின் பெயர் மட்டுமின்றி, ரைடர் ஜாக்கெட், ஹெல்மெட், வாகன உதிரிபாகங்கள் என ஹிமாலயன் பெயரை அந்த நிறுவனம் பதிவு செய்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

English summary
Royal Enfield, the world's oldest motorcycle manufacturer has something up its sleeves, a 400 cc adventure tourer perhaps, named Royal Enfield Himalayan?

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark