உற்பத்தி பிரிவில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்... ஸ்பை படங்கள்!!

By Saravana

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புத்தம் புதிய ஹிமாலயன் பைக் உற்பத்தி பிரிவில் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. அட்வென்ச்சர் டூரர் ரகத்திலான இந்த பைக்கின் சாலை சோதனை படங்கள் ஆட்டோமொபைல் இணையதளங்களில் அவ்வப்போது வெளியாகி வந்தன.

இந்த நிலையில், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய பைக் உற்பத்தி பிரிவுக்கு சென்றிருப்பதை உறுதிப்படுத்தும் விதத்தில், ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இது முழுமையான தயாரிப்பு நிலை மாடலாகவும் தெரியவில்லை. சாலை சோதனை ஓட்டத்தில் இருந்த ஆய்வுக்கான அதே பைக் மாடலாகவே தோன்றுகிறது. எனவே, சோதனை கட்டமாக உற்பத்தி செய்வதற்கு இந்த பைக் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

மேலும், நேற்று இரவே எமது வாசகர் புல்லட் ஜாகீர் இந்த படங்களில் ஒன்றை எமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தநிலையில், தற்போது சில கூடுதல் படங்களும் வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த பைக்கின் விபரங்கள் மற்றும் எப்போது விற்பனைக்கு வருகிறது என்பது குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அடிப்படை மாடல்

அடிப்படை மாடல்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கஃபே ரேஸர் மாடலான கான்டினென்டல் ஜிடி பைக்கின் சில முக்கிய பாகங்களை இந்த பைக்கில் பயன்படுத்தியுள்ளனர். பெட்ரோல் டேங்க், பின்புற டயர் மற்றும் மேல்நோக்கி எழும்பி முடியும் புகைப்போக்கி குழாய் போன்றவை கான்டினென்டல் ஜிடி பைக்கை ஒத்திருக்கிறது. பக்கவாட்டில் ஹிமாலயன் பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய சிங்கிள் சிலிண்டர் கொண்ட 410 சிசி எஞ்சினை பொருத்த இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 27 பிஎச்பி பவரையும், 32 என்எம் டார்க்கையும் வழங்கும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

வட்ட வடிவ ஹெட்லைட், விண்ட் ஷீல்டு, வட்ட வடிவ சைடு மிரர்கள், டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷன், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர்[ராயல் என்ஃபீல்டு பைக்கில் முதல்முறை], டிஸ்க் பிரேக்குகள் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கும். ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. அலாய் வீல்கள் இல்லாமல், ஸ்போக்ஸ் வீல்களே உற்பத்தி பிரிவில் இருந்த பைக்கில் பொருத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 விற்பனைக்கு எப்போது?

விற்பனைக்கு எப்போது?

அடுத்த மாதம் இந்த புதிய அட்வென்ச்சர் டூரர் வகை மோட்டார்சைக்கிளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிமுக தேதி இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், விரைவில் அறிமுக தேதி வெளியாகும் என்று நம்பலாம்

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.1.75 லட்சம் விலையில் இந்த புதிய அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை ராயல் என்ஃபீல்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பட்ஜெட் விலையிலான சிறந்த அட்வென்ச்சர் டூரர் பைக் மாடலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ராயல் என்ஃபீல்டு ரசிகர்களையும், பைக் ஆர்வலர்களிடத்தும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.

Source: Bikeadvice

Most Read Articles
English summary
Royal Enfield Himalayan Adventure motorcycle Spy Shots.
Story first published: Wednesday, September 9, 2015, 10:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X