துபாயில், ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் ஷோரூம் திறப்பு!

Written By:

துபாயில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் மோட்டார்சைக்கிள் ஷோரூம் திறக்கப்பட்டிருக்கிறது. துபாயில் திறக்கப்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் ஷோருமாக இது அமைந்துள்ளது.

சர்வதேச அளவிலான வர்த்தகத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். பல புதிய நாடுகளில் ஷோரூம்களை திறந்து மோட்டார்சைக்கிள் விற்பனையை துவங்கி வருகிறது.

Royal Enfield
 

இந்த நிலையில், துபாயில் தனது புதிய மோட்டார்சைக்கிள் ஷோரூமை ராயல் என்ஃபீல்டு திறந்திருக்கிறது. அங்குள்ள அல் குவாஸ் தொழிற்பேட்டையில் இந்த புதிய ஷோரூம் அமைந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு 350, தண்டர்பேர்டு 500, புல்லட் 350, புல்லட் 500 மற்றும் புல்லட் எலக்ட்ரா ஆகிய மாடல்கள் அங்கு விற்பனைக்கு கிடைக்கும்.

இதுதவிர, ரெட்ரோ ஸ்ட்ரீட் எடிசன் கிளாசிக் 350, கிளாசிக் 500, கிளாசிக் க்ரோம், கிளாசிக் பேட்டில் க்ரீன் மற்றும் கிளாசிக் டெசர்ட் ஸ்ட்ரோம் மற்றும் கான்டினென்டல் ஜிடி உள்ளிட்ட பல மாடல்களும் விற்பனைக்கு கிடைக்கும்.

English summary
Indian manufacturer of Royal Enfield motorcycles has set up its very first dealership in Dubai. It is located in Al Quoz, Dubai and will have several of their motorcycles on display.
Story first published: Thursday, June 18, 2015, 9:41 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark